சென்னை மக்களுக்கு குட்நியூஸ்.. அமலுக்கு வரும் 50 குடிநீர் ஏடிஎம்.. எங்கெல்லாம் அமைக்கப்படுகிறது?
சென்னை: சென்னையில் மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் 24 மணிநேரமும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் விநியோகிக்கும் வகையில் 50 குடிநீர் ஏடிஎம்கள் நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் இதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக விரைவில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
சென்னையில் ஆண்டுதோறும் மக்கள்தொகை என்பது அதிகரித்து வருகிறது. இதனால் அவர்களுக்கு தேவையான சுத்தமான குடிநீரை உறுதி செய்வது மிகவும் முக்கியமானதாகும். இதற்கான பணிகளை தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 24 மணிநேரமும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் புதிய திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
அதாவது சென்னை மாநகராட்சி சார்பில் குடிநீர் ஏடிஎம்கள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 50 குடிநீர் ஏடிஎம்களை தொடங்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் ஏடிஎம்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிறுவப்பட உள்ளது.
அதன்படி கடற்கரை, பூங்கா, பேருந்து நிலையம், மார்க்கெட்டுகளில் இந்த குடிநீர் ஏடிஎம்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை விரைவில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இப்போது முதற்கட்டமாக பட்டினப்பாக்கம், மயிலாப்பூர் மார்க்கெட், சைதாப்பேட்டை, கிண்டி பேருந்து நிலையம், சிவன் பூங்கா, அண்ணா நகர் டவர் உள்பட 40 இடங்களில் குடிநீர் ஏடிஎம் நிறுவுவதற்கான பணிகள் முடிவடைந்துள்ளன.
இந்த குடிநீர் ஏடிஎம்களில் விநியோகிக்கப்படும் தண்ணீர் என்பது சுத்திகரிப்பட்ட பிறகு வழங்கப்படும். தண்ணீர் சுத்திகரிப்பு ஆர்ஓ மற்றும் யூவி முறைகள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த ஏடிஎம்களில் குறைந்தபட்சமாக 150 மில்லி லிட்டர் தண்ணீரையும், அதிகபட்சமாக 1 லிட்டர் தண்ணீரையும் பொதுமக்களால் பெற்று கொள்ள முடியும்.
பொதுமக்கள் தண்ணீர் பாட்டில்களை கொண்டு சென்று குடிநீர் ஏடிஎம்களில் கட்டணம் செலுத்தி சுத்தமான குடிநீரை பெற முடியும். இது 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும். இதற்காக குடிநீர் ஏடிஎம்மில் நீரின் அளவு குறையும்போது அல்லது மின்னழுத்தம் குறைவாக இருக்கும்போதும் எச்சரிக்கை சமிக்ஞை காண்பிக்கப்படும். அதனை பார்த்து உடனடியாக சுதாரித்து கொள்ளவும் முடியும்.
-
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications