2000 பணியாளர்கள்.. 501 இயந்திரங்கள்! சென்னையில் 24 மணி நேரம் நீர் அகற்றும் பணி -புகார் எண் அறிவிப்பு
சென்னை: குடிநீர் வாரியத்தின் சார்பில் மாநகர் முழுவதும் 501 கழிவுநீர் வாகனங்கள் மூலம் மழைநீர் மற்றும் கழிவு நீர் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தமிழகத்தில் பருவமழை தீவிரமானதை தொடர்ந்து சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகள், சாலைகள், தாழ்வான பகுதிகள் மற்றும் பொது வெளிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
இந்த மழை நீரினை அகற்றும் பணிகளை 501 கழிவுநீர் வாகனங்கள் மூலம் மழைநீர் மற்றும் கழிவு நீர் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை 2000 களப்பணியாளர்களைக் கொண்டு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொறியாளர்கள்
அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் பேரிடர் கால நிவாரண பணிகள் மேற்கொள்ளும் வகையில் 15 கண்காணிப்பு பொறியாளர்கள் தலைமையில் 15 செயற்பொறியாளர்கள் ஒருங்கிணைப்பு அலுவலர்களாகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்.

சிறப்பு அலுவலர்கள்
30 உதவி பொறியாளர்கள் தாழ்வான பகுதிகள் மற்றும் மழைநீர் அதிகமாக தேங்கியுள்ள பகுதிகளில் களப்பணிகள் மேற்கொள்ள ஏதுவாக, மேலும் அனைத்து பகுதி அலுவலகங்களிலும் இரவு நேரங்களில் மேற்கொள்ளப்படும் களப்பணிகளை கண்காணிப்பதற்காகவும் 15 செயற்பொறியாளர்கள் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

வாகனங்கள்
மழைநீர் அகற்றும் பணிகளில் 57 எண்ணிக்கையிலான நீர் உறிஞ்சும் வாகனங்கள், கழிவுநீர் செல்லக்கூடிய பிரதான குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்வதற்காக 162 எண்ணிக்கையிலான ஜெட்ராடிங் இயந்திரங்கள் ஆகியவை இந்த பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

501 இயந்திரங்கள்
மேலும் கழிவு நீர் குழாய்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் குழாய் இணைப்புகளில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்யும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள ஏதுவாக 282 எண்ணிக்கையிலான தூர்வாரும் ஆட்டோக்கள் என மொத்தம் 501 கழிவுநீர் இயந்திரங்கள் வாகனங்கள் மழைநீர் மற்றும் கழிவு நீர் அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

குடிநீருடன் கலக்குமா?
மேலும் கழிவுநீர், குடிநீர் குழாய்களில் கலக்காமல் இருப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. கழிவுநீர் செல்லும் பிரதான குழாய்களில் தூர்வாரி பராமரிப்பு பணிகள் கடந்த 3 மாத காலமாக மேற்கொள்ளப்பட்டு, தற்போது அடைப்பு ஏதும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புகார் எண்
இந்நிலையில், பொதுமக்கள் கீழ்கண்ட எண்களில் 044-45674567 (20 இணைப்புகள்) மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண். 1916 என்ற எண்களில் தொடர்பு கொண்டு மழைநீர் மற்றும் கழிவு நீர் தொடர்பான புகார் மற்றும் குறைபாடுகளை தெரிவிக்கும் பட்சத்தில் உடனடியாக சரி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுத்திகரிப்பு பணி
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 321 எண்ணிக்கையிலான கழிவுநீர் நீரேற்று நிலையங்கள் மூலம் கழிவுநீர் உறிஞ்சப்பட்டு 5 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு முறையாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

750 எம்.எல்.டி கழிவுநீர்
பருவமழைக்கு முன்னதாக நாள் ஒன்றுக்கு சராசரியாக 640 எம்.எல்.டி அளவிலான கழிவுநீர் உறிஞ்சப்பட்டு சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பருவமழை முன்னிட்டு நாள் ஒன்றுக்கு தற்போது 750 எம்.எல்.டி வரையிலான கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகிறது.

2,000 களப்பணியாளர்கள்
பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் அகற்றும் பணிகளில் 2000 திற்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் 24 மணி நேரமும் மழை நீரினை அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications