அலையடிக்கும் புழல் ஏரி...சென்னைக்கு தண்ணீர் பஞ்சம் வர வாய்ப்பே இல்லை
புழல் ஏரியில் தண்ணீர் நிரம்பி கடல் போல காட்சியளிக்கிறது. இந்த ஆண்டு தண்ணீர் பஞ்சம் வர வாய்ப்பேயில்லை என்று மகிழ்ச்சியடைகின்றனர் சென்னைவாசிகள்
சென்னை: சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரி தற்போது கடல்போல காட்சியளிக்கிறது. இந்த வீடியோக்கள் இப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கன அடி. தற்போது ஏரியில் 2534 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.
கடந்த 2018 ஆண்டு பருவ மழை பொய்த்ததால் சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. கல் குவாரி நீர் மற்றும் விவசாய கிணற்று தண்ணீரை கொண்டு நிலைமை சமாளிக்கப்பட்டது. கடந்த ஆண்டும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இதனால் குடிநீர் வழங்கும் பூண்டி உள்பட 4 ஏரிகளும் பாதி அளவே நிரம்பின. மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் பெரும் அவதிக்குள்ளாகினர்.

தற்போது நல்ல மழை பெய்து வருவதால் சென்னையில் உள்ள நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கன அடி. தற்போது ஏரியில் 2534 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரி 80 சதவீதம் நிரம்பி இருக்கிறது.
கடந்த ஆண்டு இதே மாதத்தில் புழல் ஏரி வறண்டு காணப்பட்டது. இந்த ஆண்டு புழல் ஏரியில் முழுக்க நீர் நிரம்பியுள்ள நிலையில் வீசும் காற்றில் ஏரியில் கடல் போல அலைகள் எழும்பி தரையில் மோதும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் முக்கிய நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. தென்மேற்கு பருவமழையும் சரியான அளவில் பெய்து வருகிறது. வடகிழக்குப் பருவமழையும் சரியான நேரத்தில் துவங்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. எனவே இந்த ஆண்டு சென்னைக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கே தண்ணீர் பஞ்சம் வர வாய்ப்பு இல்லை என்று மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications