சென்னையில் மட்டும் தான் தண்ணீர் பஞ்சம்.. வேறு எங்கும் இல்லை... ராஜன் செல்லப்பா சொல்கிறார்
Recommended Video

சென்னை: சென்னையை தவிர மற்ற பகுதிகளில் தண்ணீர் பிரச்சனை இல்லை என மதுரை வடக்கு தொகுதியின் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
குடிநீர் பிரச்சனைக்காக ஜூன் 22 முதல் திமுக சார்பில் மாவட்ட வாரியாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தண்ணீர் பிரச்சனையை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்.

உள்ளாட்சித் துறை அமைச்சரின் அக்கறையற்ற தன்மையால் மக்கள் குடிநீரின்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர் பஞ்சமே இல்லையென பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். எதிர்க்கட்சிகள் வீண் வதந்திகளை பரப்புவதாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க அமைச்சர் முயற்சி செய்கிறார்.
அமைச்சர் சொல்வது போல் நிலைமை இல்லை. தண்ணீர் பிரச்சனை தலை விரித்தாடுகிறது. எனவே, அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என மாவட்டச் செயலாளர்களுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில், அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர்களிடம் பேசியதாவது, மழை வேண்டி பரிகார பூஜை நடத்தப்பட்டதன் அடிப்படையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
சென்னையை தவிர, தமிழகத்தின் எந்த பகுதியிலும் குடிநீர் பிரச்னை இல்லை எனவும் ராஜன் செல்லப்பா குறிப்பிட்டார். அரசியல் லாபத்திற்காக மட்டுமே, திமுகவினர் இந்த பிரச்னையை கிளப்பி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அதிமுகவில் அதிகாரம் யாரிடம் உள்ளது என்பதை அறிய முடியாத சூழல் உள்ளது. ஒரே அதிகாரம் படைத்த ஒற்றை தலைமை தான் அதிமுகவுக்கு தேவை என இதற்கு முன்பு அவர் பேசியது அக்கட்சியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications