சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் புகுந்தது வெள்ளநீர்.. கருவறையை தொட்டு நிற்கும் நீரால் பரபரப்பு

Google Oneindia Tamil News

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் இடைவிடாது பெய்த மழையால் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

வடகிழக்கு பருவமழையால் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அது போல் தென் மாவட்டங்களில் தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

ஆங்காங்கே தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீர் மட்டுமல்லாது அருகில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வழிவதால் அந்த தண்ணீர் ஊருக்குள் சென்று மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது...

அங்கிள் அங்கிள்.. நான் தண்ணியால வழுக்கி விழுந்துட்டேன்.. ஆவடியில் முதல்வரிடம் சிறுவன் கம்ப்ளைண்ட்! அங்கிள் அங்கிள்.. நான் தண்ணியால வழுக்கி விழுந்துட்டேன்.. ஆவடியில் முதல்வரிடம் சிறுவன் கம்ப்ளைண்ட்!

கனமழை

கனமழை

டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் அறுவடைக்குத் தயாரான பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால் விவசாயிகளுக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அது போல் செங்கல்பட்டு மாவட்டம் மேலைமையூரில் உள்ள ஏரி நிரம்பி அந்த நீர் ஊருக்குள் புகுந்துவிட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம்

அது போல் ஏரிகளின் மாவட்டம் என சொல்லப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிறைய ஏரிகள் திறந்துவிடப்பட்டுள்ளன. இதனால் சாலைகள் எல்லாம் அறு போல் தண்ணீர் ஓடுகின்றன. இதனால் குழந்தைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கூட வெளியே செல்ல முடியாத நிலை இருப்பதாக மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

ஆதிபராசக்தி கோயில்

ஆதிபராசக்தி கோயில்

இந்த நிலையில் உலக புகழ் பெற்ற மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயம் முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம், செங்கல்பட்டு, செய்யூர் பகுதிகளில் தலா 18 செ.மீ. மழை பெய்துள்ளது. அது போல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கட்டப்பாக்கத்தில் 17 செ.மீ. மழையும் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் 16 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

Recommended Video

    மழை தண்ணியில கிடந்து தவிக்கிறோம்… எட்டிக்ககூட பார்க்க நாதியில்லை… சென்னைவாசிகள் வேதனை!
    சென்னை

    சென்னை

    காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் ரெட் அலர்ட் பகுதியில் உள்ளன. இந்த நிலையில் மேல்மருவத்தூருக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வருகை தரும் நிலையில் தண்ணீர் தேங்கியுள்ளது அவர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது. கருவறை வரை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கருவறைக்குள் வெள்ளநீர் போகாமல் தடுக்க அதன் வாயிலில் மணல் மூட்டைகளை வைத்து கோயில் நிர்வாகம் அடுக்கியுள்ளது. கோயிலுக்குள் புற்றுக் கோவிலும் உள்ளது என்பதால் தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் கோயில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

    English summary
    Water Stagnanted in Melmaruvathur Adhiparasakthi temple premises as heavy rain lases in Chengleput.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X