அனைத்து மதங்களும் சமம்.. இதுதான் எங்க கொள்கை.. மோடி பேச்சில் மிகப்பெரிய மாற்றம்.. கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அனைத்து மதங்களும் சமம் என்ற கொள்கையில் உறுதியாக உள்ளோம் என்று பிரதமர் மோடி NDA கூட்டணி அரசின் பிரதமராக தேர்வான பிறகு பேசி உள்ளார்.

தனிப்பெரும்பான்மை பாஜக அரசின் பிரதமராக தேர்தல் பரப்புரையில் மதவெறுப்பு கருத்துகளை பேசியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில் தற்போது மோடியின் பேச்சில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.

lok sabha election 2024 modi congress lok sabha election 2024 lok sabha election result 2024 bjp congress 2024 2024

முன்னதாக லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய, நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள்.

இஸ்லாமியர்கள் அதிக குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமிய பெண்களுக்கு கொடுக்க காங்கிரஸ் நினைக்கிறது. "அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது,​​தேசத்தின் செல்வத்தில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள்.

கடுமையான சர்ச்சை; இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு தர போகிறீர்களா. இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள்.

பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்த செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மங்களத்தை கூட விட்டுவைக்காது, என்று பிரதமர் மோடி கடுமையாக பேசி இருக்கிறார்.

பேச்சில் மாற்றம்: அனைத்து மதங்களும் சமம் என்ற கொள்கையில் உறுதியாக உள்ளோம் என்று பிரதமர் மோடி NDA கூட்டணி அரசின் பிரதமராக தேர்வான பிறகு பேசி உள்ளார். தனிப்பெரும்பான்மை பாஜக அரசின் பிரதமராக தேர்தல் பரப்புரையில் மதவெறுப்பு கருத்துகளை பேசியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில் தற்போது மோடியின் பேச்சில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.

இன்று என்டிஏ தலைவர்கள் கூட்டத்தில், மக்களவை தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். பாஜக மற்றும் என்டிஏ கூட்டணியின் தலைவராகவும் மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து இன்று மாலை குடியரசுத் தலைவரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளது என்டிஏ கூட்டணி.

இதையடுத்து நாடாளுமன்றத்தில் பேசிய மோடி, அனைத்து மதங்களும் சமம் என்ற கொள்கையில் உறுதியாக உள்ளோம்.இந்திய வரலாற்றில் இது மிகவும் வெற்றிகரமான கூட்டணி; எங்களின் அனைத்து முடிவுகளிலும் ஒருமித்த கருத்தை எட்டுவதே எங்கள் நோக்கம்.

இந்த நாடாளுமன்ற மண்டபத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.பி.க்களுக்கும், நமது ராஜ்யசபா எம்.பி.க்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று இங்கு இவ்வளவு பெரிய குழுவை வரவேற்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியான விஷயம்.

வெற்றி பெற்ற தலைவர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். இரவு பகல் பாராமல் உழைத்த லட்சக்கணக்கான தொழிலாளர்களை இன்று இந்த மைய மண்டபத்தில் இருந்து தலைவணங்கி வணங்குகிறேன்

தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் கூட எம்பியாக வராத போதும் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி.

தமிழ்நாட்டில் வருங்காலத்தில் பாஜகவுக்கு எதிர்காலம் சிறப்பாக உள்ளது. மின்னணு வாக்கு எந்திரத்தை சந்தேகப்பட்டவர்கள் இப்போது அமைதியாகிவிட்டனர். இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு என்டிஏ தான் ஆட்சி அமைக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+