18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த தயார்.. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!
தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
லோக் சபா தேர்தல் வரும் ஏப்ரல் இறுதியில் தொடங்கி மே இறுதி வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். இதில் தமிழகத்தில் மே மாதத்தில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர்.

இது தொடர்பாக ஏற்கனவே தேர்தல் ஆணைய பணியாளர்கள் ஆய்வு பணிகளை தொடங்கிவிட்டார்கள். மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டு இருக்கிறது. அதேபோல் வாக்குப்பதிவு மையங்களை தேர்வு செய்வது குறித்த ஆலோசனையும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இதுகுறித்து தமிழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் எப்போது தேர்தல் நடத்தலாம் என்று ஆலோசனை செய்தார்.
தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் உடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசித்தார். ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டி.ஜி.பி, வருமான வரித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஏம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பால் தமிழகத்தில் 18 தொகுதிகள் காலியாக உள்ளது. இது இல்லாமல் இன்னும் 2 தொகுதிகள் காலியாக உள்ளது. அதேபோல் 1 தொகுதி காலியாக வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் ஏம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பால் காலியாக உள்ள 18 தொகுதிக்கு தேர்தல் நடத்த தயார் என்று தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையம் எப்போது கூறுகிறது அப்போது தேர்தல் நடத்த தயார்.
லோக் சபா தேர்தலுடன் சேர்த்து இந்த 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தவும் தயார் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆலோசனையின் போது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹீ உடன் இருந்தார். அதேபோல் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு, வாக்குபதிவு எந்திரங்களின் பாதுகாப்பு, வாக்குப்பதிவு மையம் அமைப்பது குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications