விஜயகாந்திற்கு நடந்தது தெரியுமா? நாங்க பெரிய இடத்தோடு மோத ரெடி. விஜய்யின் தவெக திடுக் அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் சினிமாவையே நிறுத்திவிட்டு அரசியல் தொடங்க போகிறார். அவர் சினிமாவில் நடித்து முடித்துவிட்டு முழுமையாக அரசியலுக்கு வரப்போகிறார். அவரின் கமிட்மென்ட்களை முடித்துவிட்டு மொத்தமாக அரசியலுக்கு வருவார், என்று தமிழக வெற்றி கழக செய்தி தொடர்பாளர் ராம் குமார் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ளார். அவரின் தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த கட்சிக்கான சின்னம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

We are ready to fight big fishes says Actor Vijay Tamizhaga Vetri Kazhagam spokesperson

விஜயின் அரசியல் வருகை தொடர்பாக தமிழக வெற்றி கழக செய்தி தொடர்பாளர் ராம் குமார் ஒன்இந்தியாவிற்கு அளித்த பேட்டியில்., விஜயின் அரசியல் வருகை எதிர்பார்க்காத அறிவிப்புதான். இது சர்ப்ரைஸ் அறிவிப்பாக வந்துள்ளது. ஆச்சர்யம் அளிக்கும் வகையில் விளக்கமாக அறிவிப்பு வெளியிட்டு கட்சியை தொடங்கி உள்ளார். கட்சியை இப்போதுதான் பதிவு செய்துள்ளனர்.ஆனால் பிரம்மாண்ட கூட்டம் நடக்கும். கட்சியின் தொடக்க விழா கண்டிப்பாக பெரிதாக நடக்கும்.

நான் அரசியலுக்கு வரப்போகிறேன். பிரம்மாண்டமாக கட்சி தொடங்கி போகிறேன் என்று சொல்லி இருக்கிறார். கட்சிக்கு தற்போது செய்தி தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இப்போதைக்கு கட்சியின் பெயர் மட்டுமே பதிவு செய்தோம். கொள்கை, சின்னம், கொடி பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம்.

விஜய் பேட்டி: அதற்கான அப்டேட் வெளியாகும். சட்டென வசீகரிக்கும் சின்னம் ஒன்றை கொண்டு வர உள்ளோம். அதற்கான அறிவிப்பு வரும்., தமிழ்நாடு தமிழகம் என்பதெல்லாம் ஒன்றுதான். தமிழ்நாடு என்று ஆளுநர் சொல்லாமல் போனதற்கு வேறு காரணம் உள்ளது. தமிழகம் என்று அவர் சொல்ல காரணம் வேறு. ஆனால் நாங்கள் அப்படி எல்லாம் பிரித்து பார்க்க முடியவில்லை. தமிழ்நாடு - தமிழகம் என்பதை நாங்கள் ஒரே மாதிரி பார்க்கிறோம்.

ஒரே இடத்தில் வைத்துதான் இரண்டையும் நாங்கள் பார்க்கிறோம். எங்கள் மீது விமர்சனம் வைக்க முடியவில்லை என்பதால் எழுத்துப்பிழையை எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். விஜய் சினிமாவையே நிறுத்திவிட்டு அரசியல் தொடங்க போகிறார். அவர் சினிமாவில் நடித்து முடித்துவிட்டு முழுமையாக அரசியலுக்கு வரப்போகிறார். அவரின் கமிட்மென்ட்களை முடித்துவிட்டு மொத்தமாக அரசியலுக்கு வருவார்.

அரசியல் வருகை; அதற்கு பின்புதான் பொதுக்கூட்டம் நடக்கும். விஜய் வரும் போது.. பெரிய போர் ஏற்பட்டது போல இருக்கும். சமீபத்தில் விஜய் கட்சி தொடங்கி வாழ்த்து சொன்னவர்களுக்கு நன்றி சொன்னார். அப்போது என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் என்று விஐய் கூறினார். அவர் தோழர் என்று கூறியதை கவனியுங்கள். அது எளிய மக்கள், கம்யூனிச தத்துவவாதிகள் சொல்லும் வார்த்தை.

அப்படி என்றால் விஜய்யின் அரசியல் கொள்கை எப்படி இருக்கும் என்று பாருங்கள். விஜய் மொத்தமாக சினிமாவை முடித்துவிட்டு அரசியலுக்கு வரப்போகிறார். எல்லாவற்றையும் முடித்துவிட்டு அவர் அரசியலில் மொத்தமாக குதிக்க உள்ளார்.

ஜாதி பிரச்சனை: ஜாதி பிரச்சனை தொடங்கி மக்கள் பிரச்சனை வரை. பெரியார், அண்ணா, அம்பேத்கர், காமராஜர் என்று பலரின் அரசியல் கொள்கையை சேர்த்து விஜய் அரசியல் செய்வார். மதத்தை வைத்து அரசியல் செய்வது யார்? ஜாதியை வைத்து அரசியல் செய்வது யார்? அதை எல்லாம் உடைக்க போகிறார் விஜய்.

அதை விஜய் அவரின் வாயில் இருந்து சொல்லுவார். தலைவன் கிட்ட இருந்து பெரிய உத்தரவுகள் விரைவில் வரும்.. விஜயகாந்திற்கு நடந்தது போல இங்கே நடக்காது. நாங்க பெரிய இடத்தோட மோத ரெடியா இருக்கோம், என்று ராம் குமார் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+