கருணாநிதி குடும்பத்தின் கொத்தடிமைகள்தான் நாங்க.. பெருமையாக சொன்ன வி.பி.ராசன்!
சென்னை: ‛‛நாங்கள் கருணாநிதியின் அடிமைகள் என்று சொல்வோமே. அதேபோல் கருணாநிதி குடும்பத்தில் இருக்கிற அத்தனை பேருக்கும், கழகத்தின் சார்பில் உழைக்கின்ற கொத்தடிமைகள் என்று சொன்னால் கூட எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் அடிமைகள் தான்'' என்று நேற்று திமுகவின் முப்பெரும் விழாவில் பேராசிரியர் விருது வாங்கிய விபி ராசன் பெருமையாக கூறியுள்ளார்.
இந்த விழாவில் பேராசிரியர் விருது என்பது விபி ராசனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருது பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு விபி ராசன், ‛‛விருது பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் எனது கல்லூரி காலத்தில் திமுகவில் இணைந்தேன். மாணவரணியில் உறுப்பினராக சேர்ந்தேன். இன்று வரை தொய்வில்லாமல் பணி புரிந்து கொண்டு இருக்கிறோம். நாங்கள் தொய்வில்லாமல் பணி புரிவதற்கு இந்த இயக்கம் எங்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் தந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் திமுக ஆளும் கட்சியாக இருக்கிறது. முதல்வராக திமுக தலைவர் முக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் திமுக தொடங்கி 75வது ஆண்டுகள் ஆவதையொட்டி பவளவிழா, மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்தநாள் என முப்பெரும் விழா நேற்று நடந்தது.
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று மாலை இந்த முப்பெரும் விழா நடந்தது. இந்த விழாவில் திமுகவினருக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது. அந்த வகையில் திமுகவின் முன்னாள் எம்எல்ஏ விபி ராசனுக்கு பேராசிரியர் விருது வழங்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் இந்த விருதை வழங்கினார்.
அதன்பிறகு விபி ராசன் தனியார் தெலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், ‛‛பேராசிரியர் விருது பெற்றது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு விபி ராசன்,‛‛கருணாநிதி காலத்தில் இருந்து உழைத்து கொண்டிருக்கிறோம். கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின் காலத்தில் உழைத்து கொண்டிருக்கிறோம். இப்போது உதயநிதி ஸ்டாலினின் நல் அன்பை பெற்று அவரது நல்ல மதிப்பை பெறுகிற வகையில் உழைத்து கொண்டிருக்கிறோம்.
ஆகவே எங்களின் நோக்கமும், விருப்பமும், குறிக்கோளும் கருணாநிதி குடும்பம் தான் இந்த நாட்டை ஆள வேண்டும். கருணாநிதி குடும்பம் தான் கட்சியை நடத்த வேண்டும் என்ற பெரிய நோக்கத்தோடு பணிபுரிகிறோம். நாங்கள் கருணாநிதியின் அடிமைகள் என்று சொல்வோமே.. அதேபோல் கருணாநிதி குடும்பத்தில் இருக்கிற அத்தனை பேருக்கும், கழகத்தின் சார்பில் உழைக்கின்ற கொத்தடிமைகள் என்று சொன்னால் கூட எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் அடிமைகள் தான்'' என பதிலளித்தார்.
திமுகவில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பிறகு முதல்வர் முக ஸ்டாலின் தான் தலைவராக வந்தார். அதேபோல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது முக ஸ்டாலின் தான் துணை முதல்வராக இருந்தார். தற்போதும் முதல்வர் ஸ்டாலின் மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இதனால் எதிர்க்கட்சியினர் திமுகவினரை கருணாநிதி குடும்பத்தின் அடிமைகள் என்று விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் விபி ராசன் நாங்கள் கருணாநிதி குடும்பத்தின் அடிமைகள் இல்லை. கொத்தடிமைகள் என்று சொன்னால் கூட பரவாயில்லை என்று பெருமையாக கூறியுள்ளார்.
இப்படி பேசியுள்ள விபி ராசன் யார் என்றால் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் 1989ம் ஆண்டில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவர். 1996 தேர்தலில் எம்எல்ஏ ஆனார். இவர் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக கூட வருவார். எனக்கு இன்னொரு ஆசை இருக்கிறது. ஆனால் அதுவரை எனக்கு ஆயுள் இருக்குமா என்பது தெரியவில்லை. உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதியை முதலமைச்சராக்கி விட்டு தான் என் உயிர் போக வேண்டும். இன்பநிதி வரும் காலத்தில் தமிழக முதல்வர் ஆவார் என பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூ.8,000 கூப்பன் கொடுத்தால் வழக்கு பாயும்.. கறார் காட்டிய தேர்தல் ஆணையம்! அதிரடி உத்தரவு! -
அமுதா அக்காவுக்கு சிரிப்பு தங்கல.. நாதக வேட்பாளரை பூத்தூவி வரவேற்ற திமுகவினர்! இது கூட தெரியாதா? -
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
சேலத்தில் ஸ்டாலின், கமல்ஹாசன் முன்பே.. விஜய்யை பங்கமாக கலாய்த்த பிரேமலதா -
மீஞ்சூரில் சூறையாடப்பட்ட மாணவி.. வாய் திறப்பாரா ஸ்டாலின்? உச்சகட்ட கோபத்தில் எடப்பாடி பழனிசாமி! -
Delimitation: பொருளாதாரம், நிதி ஆதாரத்தில் பெரிய ஓட்டை விழும்.. தென்னிந்திய மாநிலங்களுக்கு 'இரட்டை தண்டனையா'? -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications