என்னாது தேர்தல் பணிகளுக்கு ஆசிரியர்களா.. அலறி அடித்து ஓடும் அதிமுக.. இதுதான் பின்னணி!
Recommended Video

சென்னை: அதிமுகவுக்கும் ஆசிரயர் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான். ஆகவே வரப்போகும் தேர்தல் பணிகளுக்கு ஆசிரியர்களை பயன்படுத்த வேண்டாம் என்று அதிமுக கூறியுள்ளது.
கடந்த 2003- ம் ஆண்டு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கத்தினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பெரும்பாலும் போராட்டங்களை வெறுக்கும் குணம் கொண்ட ஜெயலலிதாவும் இந்த போராட்டங்களை வெறுத்தார். அதோடு போராட்டக்காரர்களை கைது செய்யவும் உத்தரவிட்டார். விளைவு காவல்துறை 30.06.2003 அன்றும் 01.07.2003 அன்றும் நள்ளிரவில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் வீடுகளில் புகுந்தது. போராட்ட களத்தில் நின்றவர்கள் குறிவைத்து கைது செய்யப்பட்டனர்.

பேருந்துகளை மறித்தல், எரிக்க முயற்சித்தல், பெண் அலுவலர்களின் மீது அத்து மீறி நடத்தல் பணிக்கு செல்பவர்களை தடுத்தல், அரசு உடமைகளை சேதப்படுத்துதல், தகாத வார்த்தைகளால் வசைபாடுதல் " பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் என எண்ணற்ற குற்றசாட்டுகள் கூறப்பட்டது. இவ்வாறு கைது செய்யப்பட ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேரை பணியிலிருந்தும் நீக்கம் செய்தார் ஜெயலலிதா. தமிழகத்தில் உள்ள சிறைகள் நிரம்பி வழிந்தன.
போராடியவர்கள் அத்தனை பெரும் 03.7.2003 வரை எஸ்மா சட்டத்தின் கீழ்தான் கைது செய்யப்பட்டார்கள். பின்னர் அரசு அந்த சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து அதை டெஸ்மா என மாற்றியது. இப்படி போராடியவர்களில் 88 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் விளைவு அடுத்த ஆண்டு நடைபெற்ற அதாவது 2004 –ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக படு தோல்வியை சந்தித்தது. திமுக காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் வென்றது. இது கடந்த கால வரலாறு.

அது போல இப்போதும் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர். அனால் இந்த போராட்டங்கள் அரசால் ஒடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் பங்கு பெற்ற 28 கல்லூரி ஆசிரியர்கள் பல ஊர்களுக்கு ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளனர். இது ஆசிரியர்களிடையே பெரும் மன கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. இவர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டால் கடந்த 2004 ல் அதிமுகவுக்கு ஏற்பட்ட நிலையே ஏற்படும் என்பது உளவுத்துறை கொடுத்திருக்கும் ரிப்போர்ட்.

இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியப் பிரதா சாகு தலைமையில் நடைபெற்ற தேர்தல் குரித்ட ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக சட்டமன்ற துணை சபாநாயகரும் அதிமுகவின் தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் முழு நேர பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு பதிலாக வேறு பணியில் இருக்கும் அரசு ஊழியர்களை தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார், இது ஏற்கனவே கொதிப்பில் இருக்கும் ஆசிரியர்களுக்கு இன்னும் ஆத்திரத்தை உருவாக்கியுள்ளது. ஆனால் இதற்கு விளக்கமளித்துள்ள பொள்ளாச்சி ஜெயராமன் இதற்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications