Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எங்களுக்கு குண்டு வைக்க தெரியும்.. பாஜக போராட்டத்தில் தமிழக அரசுக்கு முன்னாள் ராணுவ வீரர் மிரட்டல்

பாஜகவின் உண்ணாவிரத போராட்டத்தில் ஓய்வுபெற்ற வீரர் எங்களுக்கு குண்டும் வைக்க தெரியும் என்று தமிழ்நாடு அரசை எச்சரித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராணுவ வீரர் பிரபு கொலை மற்றும் பாஜக நிர்வாகி தடா பெரியசாமி வீடு மற்றும் கார் மீது நடத்தப்பட்டத்தை தாக்குதலை கண்டித்து சென்னையில் பாஜக சார்பில் முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்துகொண்ட உண்ணாவிரத போராட்டத்தில் எங்களுக்கு குண்டும் வைக்க தெரியும் என்றும் ஓய்வுபெற்ற வீரர் ஒருவர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கிருஷ்ணகிரியில் கடந்த சில நாட்களுக்கு முன் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக ராணுவ வீரர் பாபு திமுக நிர்வாகியால் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை வைத்து திமுகவை கடுமையாக பாஜக விமர்சித்து வந்தது.

அதேபோல் பாஜக பட்டியலின பிரிவு நிர்வாகி தடா பெரியசாமி வீடு மற்றும் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது போன்ற சம்பவங்களை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக கூறி உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார் அண்ணாமலை.

 உண்ணாவிரத போராட்டம்

உண்ணாவிரத போராட்டம்

சென்னை சிவானந்த சாலையில் இன்று காலை 9:30 மணியளவில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் பாஜக மூத்த நிர்வாகிகள் கலந்துகொள்ளும் உண்ணாவிரத போராட்டமும், மாலை 4 மணியளவில் மெழுவர்த்தி ஏந்தி அண்ணாமலை தலைமையில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை எதிரிலிருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

 தமிழ்நாடு அரசுக்கு மிரட்டல்

தமிழ்நாடு அரசுக்கு மிரட்டல்

அதை தொடர்ந்து இன்று காலை அண்ணாமலை தலைமையில் தொடங்கிய உண்ணாவிரத போராட்டத்தில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள், பாஜக தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அவர்கள் தமிழ்நாடு அரசை கண்டித்து உரையாற்றி இருக்கிறார்கள். அதில் ஒரு முன்னாள் ராணுவ வீரர் தமிழ்நாடு அரசுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ஆற்றிய உரை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 எங்களை சீண்டினால் தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல

எங்களை சீண்டினால் தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல

அவர் பேசுகையில், "ஒரு விசயத்தில் நான் தமிழ்நாடு அரசை எச்சரிக்கிறேன். இந்திய ராணுவm உலகத்திலேயே 2 வது பெரிய ராணுவம். உலகத்திலேயே ஒழுக்கமான ராணுவம். நீங்கள் ராணுவ வீரர்களை எங்கு வேண்டுமானாலும் பார்க்கலாம். ஒழுக்கத்துக்கு பெயர்போனது ராணுவம். அப்படிப்பட்ட ராணுவ வீரர்களை சீண்டினால் அது தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாடு அரசுக்கும் நல்லது அல்ல.

 சட்டம் ஒழுங்கு

சட்டம் ஒழுங்கு

நாங்கள் எந்த விசயத்தை செய்தாலும் ஒழுக்கமாகவும் உத்வேகத்துடன் செய்து காட்டுபவர்கள். அப்படிப்பட்ட எங்களுக்கு நீங்கள் பரிட்சை வைத்து பார்க்க வேண்டும் என்று நினைத்தால் நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பாக இருக்காது. ஏனென்றால், நான் அன்பாக சொல்கிறேன். ஊடகத்துறையினருக்கும் சொல்லிக்கொள்கிறேன்.

 குண்டு வைக்க தெரியும்

குண்டு வைக்க தெரியும்

இங்கே அமர்ந்து இருக்கின்ற அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களும் குண்டு வைப்பதிலே கெட்டிக்காரர்கள். சுடுவதிலே கெட்டிக்காரர்கள். சண்டையிடுவதில் கெட்டிக்காரர்கள். இந்த வேலைகள் எல்லாம் எங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், இதை எல்லாம் நாங்கள் செய்வதாக இல்லை. எங்களை செய்ய வைத்து விடாதீர்கள் என்றுதான் தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்." என்றார்.

 நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஓய்வுபெற்ற ராணுவ வீரரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும், அவர் மீது சட்டப்படி காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுகவினர், நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+