ரிவால்டோ யானை காட்டுக்குள்தான் இருக்கிறது.. கண்காணித்து வருகிறோம்.. ஹைகோர்ட்டில் அரசு தகவல்
சென்னை: ரிவால்டோ யானை தற்போது காட்டுக்குள்தான் இருப்பதாகவும், அதனை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தமிழ்நாடு அரசின் வனத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து இருக்கிறது.
நீலகிரி மசினகுடி பகுதியில் சுற்றி வந்த ரிவால்டோ யானை சுவாச பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பெரிய அளவில் காட்டு பகுதிகளுக்கு செல்லாமல், மனிதர்கள் வாழும் இடங்களுக்கு அருகே இந்த யானை சுற்றி வந்தது.
தற்போது இதன் தும்பிக்கை சுருங்கி பாதிப்பு ஏற்பட்டதால் இதற்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதை வனத்துறையினர் ஒவ்வொருமுறை காட்டுக்குள் சென்று விட்டாலும் மீண்டும் மக்கள் இருக்கும் பகுதிக்கு வந்து விடுகிறது. மசினகுடி அருகே வாழைத்தோட்டம் பகுதிக்கு மீண்டும் மீண்டும் இந்த யானை திரும்பி வந்து விடுகிறது.

வழக்கு
இந்த நிலையில் இந்த யானையின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி இந்திய விலங்குகள் உரிமை மற்றும் கல்வி மையம் என்ற அமைப்பின் நிறுவன அறங்காவலர் முரளிதரன் என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். அதில் இந்த யானையை காட்டுக்குள் விட கூடாது. அதற்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். அதன்பின் அந்த யானையை திருச்சி எம்.ஆர்.பாளையம் யானைகள் முகாமுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

உடல்நிலை
இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் மனுதாரர் தரப்பு, அந்த யானை பெரிய அளவில் காட்டுப்பரப்பில் வாழ்ந்தது கிடையாது. இதனால்தான் மனிதர்கள் இருக்கும் பகுதிக்கு அருகில் சுற்றி வருகிறது. இதன் உடல்நிலையும் இப்போது சரியில்லை. இதனால் அதனை முகாமில் விட வேண்டும் என்று வாதம் வைத்தார்.

கேள்வி
இந்த வழக்கில் தமிழ்நாடு வனத்துறையின் நிலைப்பாடு என்ன? யானையின் மறுவாழ்விற்கு அரசிடம் என்ன திட்டம் உள்ளது என்று உயர் நீதிமன்றம் அறிக்கை கேட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தமிழக வனத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ரிவால்டோ யானையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இதற்கு ஏற்கனவே சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

சாத்தியம்
வாழைத்தோட்டம் பகுதியில் சிகிச்சை அளித்து காட்டுக்குள் விட்டு இருக்கிறோம். காட்டுக்கு அனுப்பும் முதல் முயற்சி தோல்வியடைந்தது. ஆனால் மீண்டும் முயற்சி செய்து அதை காட்டுக்குள் விட்டுள்ளோம். அந்த யானை தற்போது வரை திரும்பி வரவில்லை. காட்டில்தான் இருக்கிறது. அதை 30 அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்கிறார்கள், என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து ரிவால்டோ யானை காட்டில் வாழ்வதன் சாத்தியங்களை ஆராய வேண்டும் என்று கூறி, வழக்கை 3 வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications