முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை அகற்ற திமுகவுக்கு ஆதரவா? டிடிவி தினகரன் பதில்
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர திமுகவுக்கு ஆதரவு அளிப்போம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடந்தது. இதேபோல் வரும் மே 19ம் தேதி 4தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

இதில் குறைந்த பட்சம் 6 தொகுதிகளில் வென்றால் தான் அதிமுக ஆட்சியை தக்க வைக்க முடியும். அதேநேரம் குறைந்த பட்சம் 20 தொகுதிகளில் வென்றால் தான் திமுக ஆட்சியை அமைக்க முடியும். இதனிடையே அமமுகவின் டிடிவி தினகரன் இந்த தேர்தலில் கணிசமான தொகுதிகளில் வென்று, திமுகவின் உதவியுடன் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை கலைக்க திட்டமிட்டுள்ளார்.
இதன் காரணமாக திமுகவுடன் டிடிவி தினகரன் கூட்டு வைத்திருப்பதாக ஊர் ஊராக மேடைகளில் முதல்வர் பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வமும் சொல்லி வருகிறார்கள்.
இதுதொடர்பான தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார். அதில் "திமுக எந்த ரயிலிலும் ஏற தயாராக இருக்கிறது. எங்களிடம் கூட வாய்ப்பினை தேடலாம். எடப்பாடி பழனிச்சாமியின் கொடிய நஞ்சு ஆட்சியை அகற்ற எல்லோரும் சேர்ந்து வாக்களிக்கும் போது நாங்களும் வாக்களிப்போம். இதனை திமுகவிடன் கூட்டணி என்று நினைத்தார்கள் என்றால் அது அவர்களின் அறியாமை" என்றார்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications