படர் தாமரை வேண்டுமானால் மலரும்.. எப்போதும் தாமரை மலராது.. சீமான் கிண்டல்!
தமிழர்களுக்கு படர் தாமரை வேண்டுமானால் மலரும், ஒரு போதும் தாமரை மலராது என்று நாம் தமிழர் கட்சியினர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழர்களுக்கு படர் தாமரை வேண்டுமானால் மலரும், ஒரு போதும் தாமரை மலராது என்று நாம் தமிழர் கட்சியினர் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நாம் தமிழர் அலுவலகத்தில் வேலுநாச்சியாரின் 222வது நினைவு தினம் கொண்டாடப்பட்டது. அதன்பின் நாம் தமிழர் கட்சியினர் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பாஜகவை விமர்சித்து இந்த பேட்டியில் பேசினார்.

அதில், பாஜகவிற்கு தமிழகம் மீது எப்போதும் அக்கறை கிடையாது. தமிழர்களை அவர்கள் எப்போதுமே ஒரு பொருட்டாக மதித்தது இல்லை. நாம் எல்லாம் பாஜகவிற்கு வெறும் ஓட்டுகள்தான்.
கஜா புயலின் போதே அது கண்கூடாக தெரிந்துவிட்டது. பிரதமர் மோடி இன்னும் கஜா சேதங்களை பார்வையிடவில்லை. கஜாவிற்கு நிவாரணமும் அளிக்கவில்லை.
காவிரி, பாலாறு என்று நாம் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறோம். இவர்களுக்கு தாமரை மலர தண்ணீர் வேண்டுமாம். முதலில் விவசாயிகளுக்கு தண்ணீர் வரட்டும். பிறகு பார்க்கலாம்.
தமிழகத்தில் தாமரை எப்போதும் மலராது. வேண்டுமானால் தமிழர்களுக்கு படர் தாமரை வர வாய்ப்புள்ளது, ஆனால் தாமரை வர வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.
-
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
விஜய்யை ஒருமையில் பேசிய சீமானுக்கு சிக்கல்? சென்னை போலீஸ் கமிஷனரிடம் தவெக வழக்கறிஞர் புகார் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல்












Click it and Unblock the Notifications