வாழத்தான் பிறந்தோம்! வாழ்ந்துதான் பார்ப்போம்! தற்கொலை தீர்வல்ல! மனோ தங்கராஜ் தரும் தன்னம்பிக்கை!
சென்னை: தற்கொலை சிந்தனை இன்று உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்து வரும் நிலையில், தற்கொலை என்பது எதற்கும் தீர்வல்ல என்பதை மையப்படுத்தி அமைச்சர் மனோ தங்கராஜ் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
தற்கொலை சிந்தனையிலிருந்து மாணவர்களை தற்காக்க வேண்டியது பற்றிய தனது மனவோட்டத்தை கட்டுரையாகவே வடித்துள்ளார். அதன் விவரம் வருமாறு;

''சமீப காலங்களில், மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. இத்தகைய நிகழ்வுகள் நமது சமூகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். தற்கொலை குறித்த எனது கவலைகளை வெளிப்படுத்தவும், அதனை தடுக்கும் வகையிலான பேச்சுக்களை இனி அதிகரிக்கவும் உள்ளேன்.
எனது இளமைப் பருவத்தில், சவால்கள் தான் எனது தனிப்பட்ட வளர்ச்சிக்கான படிக்கற்களாக இருந்தன. பின்னடைவுகளை துணிச்சலுடன் எதிர்கொண்டு மாற்றுப் பாதைகளை உருவாக்கக் கற்றுக்கொண்டேன், தினசரி என்னை செழுமைப்படுத்தும் சந்திப்புகள் மூலம் வழிநடத்தப்பட்டேன்.
இந்தச் சூழலில் பல இளைஞர்களின் தற்போதைய கதை வித்தியாசமாக உள்ளது. தோல்வி என்பது வாழ்க்கையின் மற்ற எல்லா அம்சங்களையும் மறைத்து, சோகத்தின் சுழலுக்கு இழுத்துச் சென்று விடுகிறது. விலை உயர்ந்த பொருட்களை வைத்திருந்தால் தான் மதிப்புடையவர் என்ற பார்வை மோசமானது.
இந்த சிக்கலை உன்னிப்பாக பார்க்கும்போது, டிஜிட்டல் யுகம் என்பது நன்மை மற்றும் தீமை ஆகிய இரு பக்கங்களைக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. டிஜிட்டல் யுகத்தால் மாணவர்களின் சமூகத் தொடர்புகள் அறுபட்டு, தூக்கமின்மையுடன் போராடும் ஒரு தலைமுறையை காண முடிகிறது.
மாணவர்கள் மத்தியில் விளையாட்டுகளை ஊக்குவிப்பதன் மூலம் உடல் மற்றும் மன நல்வாழ்வு, சமூகப் பிணைப்பு ஆகியவற்றுக்கான ஊக்கியாக செயல்பட முடியும். விளையாட்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கிறது, அதன் மூலம் தூக்கமின்மை போன்ற சிக்கல்களைத் தணிக்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வாழ்க்கையை சமநிலைப்படுத்துவது மிகவும் முக்கியமானது, டிஜிட்டல் பிடியிலிருந்து விடுபட மாணவர்களை ஊக்குவிப்பதும், அவர்களின் தொடர்புகளை விசாலப்படுத்துவதும், அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு வழி வகுக்கும். அதற்காக தொழில்நுட்பத்தின் மீதான வெறுப்பை வளர்ப்பது என்று அர்த்தம் அல்ல.
மாணவர்களின் தனித்திறனை கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டிய கடமை நம்மில் ஒவ்வொருவருக்கும் உள்ளது. தனித்திறன் ஊக்குவிப்பு மூலம் மாணவர்களின் மன அழுத்தம் குறைய வாய்ப்பிருக்கிறது.
உதவி கேட்பது என்பது வெட்கப்பட வேண்டிய விவகாரம் அல்ல என்பதையும் அதனை வாழ்வின் அடுத்தக்கட்ட பயணத்திற்கான ஒரு படியாக கருத வேண்டும் என்பதை சொல்லிக்கொடுக்க வேண்டும். மாணவர்களிடம் தென்படும் மனச்சோர்வு மற்றும் தற்கொலை எண்ணத்தின் அறிகுறிகள் பற்றி நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.
ஒரு மாணவன் துன்பத்தில் இருப்பதை அறிந்தால் தயங்காமல் அந்த மாணவனை அணுகி அன்பான, ஆறுதலான, வார்த்தைகளுடன் தன்னம்பிக்கையை வளரச் செய்யுங்கள். இளைய தலைமுறையினருக்கு ஆதரவின் தூண்களாக இருப்போம், தன்னம்பிக்கை மிகுந்த எதிர்காலத்தை நோக்கி அவர்களை வழிநடத்துவோம்.'' இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது கட்டுரையில் தன்னம்பிக்கையூட்டும் எண்ண அலைகளை பகிர்ந்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications