எமிஸ், டிஎன்எஸ்இடி செயலி.. தொடக்க கல்வி ஆசிரியர்கள் எடுத்த அதிரடி முடிவு.. கூட்டாக அறிவிப்பு
சென்னை: எமிஸ் பதிவேற்ற பணிகளை மேற்கொள்ள மாட்டோம் என தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் கற்பித்தல் தொடர்பான தகவல்கள், மாணவர்களின் மதிப்பெண்கள் தகவல்கள் , மாணவர்களின் வருகை பதிவேடு, ஆசிரியர்களின் வருகை, கற்பித்தல் தொடர்பான அனைத்து பணிகளையும் எமிஸ் எனப்படும் ஆன்லைன் செயலியில் பதவியேற்றம் செய்ய வேண்டும்.

கற்பித்தல் பணிகளுக்கு நடுவில், இதற்கு அதிக நேரம் ஒதுக்குவதால், கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதாக ஆசிரியர்கள் நீண்ட காலமாக குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் வருகை மற்றும் ஆசிரியர்கள் வருகை பதிவேற்றம் தவிர மற்ற எந்த விவரங்களையும் எமிஸ் பதிவேற்ற பணிகளில் மேற்கொள்ள மாட்டோம் என தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில், தொடக்கக்கல்வி இயக்குநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: "எண்ணும் எழுத்தும் திட்டம், ஆசிரியர்களுக்கு தேவையற்ற பணிச்சுமைகளை ஏற்படுத்துவதோடு மாணவர்களின் கல்வித் தரத்தை பாதிக்கிறது. எனவே அதை முழுமையாக கைவிட வேண்டும். எண்ணும் எழுத்தும் திட்டத்தில் செல்போன் செயலி மூலம் தேர்வு நடத்துவதையும், அதன்மூலம் மாணவர்களின் மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய சொல்வதையும் கைவிட வேண்டும்.
மேலும் ஆசிரியர்களின் கற்பித்தல் பணிக்கு இடையூறாகவும், மன உளைச்சலை ஏற்படுத்தக் கூடியதுமான எண்ணும் எழுத்தும் திட்டத்தின் ஆன்லைன் பதிவேற்றப் பணிகளில் இருந்தும், எமிஸ், டிஎன்எஸ்இடி செயலி மூலம் நடைபெறும் பதிவேற்றப் பணிகளில் இருந்தும் வருகிற 16-ம் தேதி முதல் ஆசிரியர்கள் தங்களை முழுமையாக விடுவித்துக் கொள்வது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் வருகை மற்றும் ஆசிரியர்கள் வருகை பதிவேற்றம் தவிர மற்ற எந்த விவரங்களையும் செல்போன் மூலம் ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்யமாட்டார்கள்"இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறையின் எமிஸ் தளத்தில் பதிவேற்றப்படும் தகவல்களை திட்டித்தான் மாணவர்களின் கல்வி திறன்களை அரசு ஆய்வு செய்ய பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications