7 தமிழர் விடுதலைக்காக ஆளுநரிடம் மீண்டும் அழுத்தம் கொடுப்போம்... சொல்கிறார் அமைச்சர் ரகுபதி

நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் நல்ல முடிவை தரும் என எதிர்பார்க்கிறோம் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக ஆளுநரிடம் மீண்டும் அழுத்தம் கொடுக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 7 பேரின் விடுதலை குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் நல்ல முடிவை தரும் என எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சேலத்தில் மத்திய சிறையில் சுமார் ஒரு மணி நேரம் ஆய்வு மேற்கொண்டார் அங்கு செய்தியாளர்களிடம் பேசிய ரகுபதி, மத்திய சிறையில் கைதிகளின் நிலவரம் குறித்தும் அவருடைய நிலைமையை குறித்தும் ஆய்வு மேற்கொண்டதாகவும் தற்போது மத்திய சிறையில் 1351 கைதிகள் உள்ளனர் எனவும் பெண்கள் சிறையில் 78 பேர் உள்ளதாகவும் தெரிவித்தார்

எப்போதும் 800 கைதிகள் வரை மட்டுமே மத்திய சிறையில் இருக்கும் நிலையில் தற்போது அதிகரித்துள்ளது எனத் அமைச்சர் தெரிவித்தார்.

கொரோனா பரவ வாய்பில்லை

கொரோனா பரவ வாய்பில்லை

சிறை கைதிகளுக்கு பத்து நாளுக்கு ஒரு முறை தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் குற்றம் புரிந்த கைதிகளை பரிசோதனை செய்து தொற்று இல்லை என தெரிந்த பிறகு சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். எனவே சிறையில் உள்ள கைதிகளுக்கு தொற்று பாதிப்பு என்பது கிடையாது என்றும் மத்திய சிறையில் தொற்று ஏற்படும் என்ற அச்சமும் அபாயமும் இல்லை எனவும் கூறினார்

சிறை கைதிகளுக்கு வருமானம்

சிறை கைதிகளுக்கு வருமானம்


சிறையில் உள்ள கைதிகளுக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் மத்திய சிறையில் பல்வேறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருவதாகவும் குறிப்பாக அரசு மருத்துவமனைக்கு தேவையான பிரெட் தயாரித்து வழங்கப்பட்டு வருவதாகவும் ஒவ்வொரு கைதியும் மாதம் 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை சம்பாதிக்கும் அளவிற்கு மத்திய சிறையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்

சிறை கைதிகள் விடுதலை

சிறை கைதிகள் விடுதலை

பல ஆண்டுகளாக சிறைவாசம் உள்ள கைதிகளுக்கு விடுதலை செய்யும் நடவடிக்கை அரசு மேற்கொண்டு வருவதாகவும் தற்போது நன்னடத்தை அடிப்படையில் 60 பேரின் விடுதலை குறித்து அரசாணை வெளியிடப்பட்டு ஆளுநரிடம் அனுப்பப்பட்டுள்ளது விரைவில் 60 பேரின் விடுதலை நடைபெறும் எனவும் கூறினார்.

பேரறிவாளன் விடுதலை

பேரறிவாளன் விடுதலை

நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் நல்ல முடிவை தரும் என எதிர்பார்க்கிறோம் என்று கூறிய அமைச்சர் ரகுபதி, ஏற்கனவே ஏழு பேரின் விடுதலை குறித்து ஆளுநரிடம் தெரிவித்திருந்தோம் மீண்டும் இது குறித்து ஆளுநரிடம் மீண்டும் அழுத்தம் தரப்படும் என தெரிவித்தார்

இரண்டாவது அரசாணை

இரண்டாவது அரசாணை

தமிழக அரசின் இரண்டாவது அரசாணையில் நீண்ட காலம் சிறையில் இருக்கக் கூடிய கைதிகளுக்கு அவர் மனநிலையை வயது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விரைவில் அவர்களுக்கான விடுதலை பெறுவதற்கு அரசாணை வெளியிடப்படும் என்றும் முதல் அரசாணையை நடைமுறைப்படுத்த பிறகு இரண்டாவது அரசாணையும் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் ரகுபதி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+