கருணாநிதி வழியில் ஆட்சி நடத்துவோம்..வாக்களிக்க தவறியவர்களுக்கும் பணியாற்றுவோம் - மு.க ஸ்டாலின்

திமுகவிற்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த அனைவருக்கும் மு.க ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். வாக்களிக்க தவறிய அனைவருக்கும் சேர்ந்தே பணியாற்றுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக மக்கள் வழங்கியுள்ள மகத்தான வெற்றிக்கு வழிவகுத்து தந்துள்ளவர்களுக்கு நன்றி என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். எந்த எதிர்பார்ப்போடு வெற்றியை தந்தார்களோ அந்த நம்பிக்கைக்கு ஏற்ப ஆட்சி நடத்துவோம் என்றும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்றும் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

சட்டசபைத் தேர்தலில் திமுக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. பத்தாண்டுகளுக்குப் பிறகு அரியணையில் அமரப்போகிறது திமுக. கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் வேட்பாளரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அமோக வெற்றிப்பெற்றார்.

மு.க ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆதி ராஜாராம் 34,392 வாக்குகள் மட்டுமே பெற்ற நிலையில் முக ஸ்டாலின் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 622 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றிவாகை சூடினார்.

கொளத்தூரில் ஸ்டாலின் வெற்றி

கொளத்தூரில் ஸ்டாலின் வெற்றி

வாக்கு எண்ணும் மையமான லயோலா கல்லூரிக்கு சென்று தேர்தல் அதிகாரியிடம் வெற்றிச்சான்றிதழை பெற்றுக்கொண்டார் மு.க ஸ்டாலின். அங்கிருந்து சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் வைத்து ஆசி பெற்றார். அப்போது உணர்ச்சிமயமாக காணப்பட்டார் மு.க ஸ்டாலின்.

திமுகவிற்கு மக்கள் தீர்ப்பு

திமுகவிற்கு மக்கள் தீர்ப்பு

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முக ஸ்டாலின், திமுகவிற்கு வாக்களித்து மகத்தான வெற்றி பெற வைத்துள்ளனர். அண்ணா சொல்வது போல மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என மக்கள் அளித்துள்ள தீர்ப்பினை மனதார ஏற்றுக்கெள்கிறோம்.

மக்கள் நம்பிக்கை

மக்கள் நம்பிக்கை

தமிழக மக்கள் வழங்கியுள்ள மகத்தான வெற்றிக்கு வழிவகுத்து தந்துள்ளவர்களுக்கு நன்றி. எந்த எதிர்பார்ப்போடு வெற்றியை தந்தார்களோ அந்த நம்பிக்கைக்கு ஏற்ப திமுக ஆட்சி நிறைவேற்றுவோம். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்போம். தமிழகம் பாதாளத்திற்கு சென்றுள்ளதை புரிந்து திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளீர்கள். திமுகவுக்கு வாக்களிக்க தவறியவர்களுக்கும் சேர்ந்து பணியாற்றுவோம்.

கருணாநிதி வழியில் ஆட்சி

கருணாநிதி வழியில் ஆட்சி

5 முறை முதல்வராக இருந்து மக்களுக்கு பணியாற்றியவர் கருணாநிதி அவர் வழியில் ஆட்சி நடத்துவோம். அண்ணா, கருணாநிதியின் வழிநின்று மகத்தான ஆட்சியை தருவோம். தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவோம் என்று வறினார். பத்தாண்டுகளுக்கான திட்டத்தை வகுத்து பணியாற்றுவோம் என்றும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+