2 மாதம் வாடகை வேண்டாம்.. கவலைப்படாதீர்கள்.. வீட்டு ஓனர்களின் கரிசனம்.. ஆச்சர்யமளித்த சர்வே!
சென்னை: கொரோனா காரணமாக பெரிய அளவில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கூட பல இடங்களில் வீட்டு ஓனர்கள், தங்கள் வீட்டில் வாடகைக்கு இருக்கும் நபர்களிடம் மிகவும் கரிசனத்துடன் நடந்து உள்ளனர். 16% வீட்டு ஓனர்கள் தங்கள் வீட்டில் இருப்பவர்களிடம் இரண்டு மாதம் வாடகை தர வேண்டாம் என்று கூறியுள்ளனர்.
கொரோனா லாக்டவுன் காரணமாக நாடு முழுக்க கடும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரியல் எஸ்டேட் துறை தொடர்பாகவும், வீட்டு ஓனர்கள் - வாடகைக்கு இருப்பவர்கள் தொடர்பாகவும் 99 ஏக்கர்ஸ் (99acres.com) நிறுவனம் சர்வே ஒன்று எடுத்துள்ளது.
99acres.com என்பது பிரபல ரியல் எஸ்டேட் ஆன்லைன் நிறுவனம் ஆகும். பல்வேறு வீட்டு ஓனர்கள் மற்றும் வீடுகளில் தங்கி இருக்கும் நபர்களிடம் இந்த நிறுவனம் சர்வே எடுத்துள்ளது.

மிகவும் கரிசனம்
இந்த நிலையில் கொரோனா காரணமாக பெரிய அளவில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கூட பல இடங்களில் வீட்டு ஓனர்கள், தங்கள் வீட்டில் வாடகைக்கு இருக்கும் நபர்களிடம் மிகவும் கரிசனத்துடன் நடந்து உள்ளனர். தங்களை போலவே தங்கள் வீட்டில் இருக்கும் நபர்களும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்களிடம் வாடகை வாங்க கூடாது என்று வீட்டு ஓனர்கள் பலர் முடிவு செய்துள்ளனர். பொது மக்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர் என்று சர்வே மூலம் தெரியவந்துள்ளது..

வாடகை வேண்டாம்
அதன்படி 16% வீட்டு ஓனர்கள் தங்கள் வீட்டில் இருப்பவர்களிடம் இரண்டு மாதம் வாடகை தர வேண்டாம் என்று கூறியுள்ளனர். மேலும் 41% பேர் உங்களால் முடியும் போது வாடகை கொடுங்கள் என்று வீட்டில் இருக்கும் நபர்களிடம் கூறியுள்ளனர். 44% பேர் எந்த விதமான வாடகையையும் ஏற்றாமல் இருந்துள்ளனர். மேலும் 76% பேர் இன்னும் கூட தங்கள் வீட்டை அதை வாடகையில் விட தயாராக இருக்கிறார்கள்.

கேட்டான முடிவு
24% பேர் லாக் டவுன் முடிந்து பொருளாதாரம் சரியான பின் விலையை பார்த்துவிட்டு வாடகைக்கு விட தயாராக உள்ளனர். 54% பேர் வாடகையை குறைக்காமல் அதே வாடகைக்கு வீட்டை வாடகைக்கு விட தயாராக உள்ளனர்.11% பேர் மட்டுமே வாடகையை ஏற்ற முடிவு செய்துள்ளனர். அதேபோல் 80% பேர் தங்கள் நிலம் அல்லது வீட்டை அதே பழைய மார்க்கெட் விலையில் விற்க முடிவு செய்துள்ளனர்.

வீடு விற்பனை என்ன
20% பேர் தங்கள் வீட்டை விற்கும் எண்ணத்தில் இல்லை. 45% பேர் தங்கள் வீட்டை அல்லது நிலத்தை விலை குறையாமல் விற்க உள்ளனர். 10% பேர் விலை இன்னும் ஏறும் என்று காத்து இருக்கிறார்கள். 57% இடைதேர்தரகர்கள் ரியல் எஸ்டேட் துறை வீழ்ச்சி அடையும் என்கிறார்கள். 29% இடைத்தரகர்கள் தங்கள் எதிர்க்கலாம் குறித்து அச்சம் எழுப்பி உள்ளனர். 50% பேர் பெரிய அளவில் பொருளாதார சரிவு வரும், மீளுவது கடினம் என்கிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications