இந்த நான்கு மாவட்டத்தில் கனமழை அடித்து வெளுக்க போகுது.. வானிலை மையம் தகவல்
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் வடகிழக்கு பருவமழையால் கடந்த சில மாதங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிறைந்து வருகின்றன.
சென்னையிலும் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

கனமழைக்கு வாய்ப்பு
இந்நிலையில் இந்த வார இறுதியில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வியாழன் தொடங்கி சனிக்கிழமை வரை சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

24 மணிநேரத்தில்
இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ளனர். இதன்படி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும்.

நெல்லையில்
இதேபோல் ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலைமையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

எச்சரிக்கை
குமரி கடல் பகுதியில் 2 நாட்களுக்கு சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தங்களது அறிவிப்பில் கூறியுள்ளனர்.
-
40% ஏற்கனவே காலி.. இந்தியாவை தாக்கும் பேராபத்து? சாட்டிலைட் போட்டோவை பார்த்தால் நிலைமை புரியும் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications