ஸ்பெஷல் நியூஸ்.. உருவானது மேலடுக்கு சுழற்சி.. இந்த 10 மாவட்டங்களிலும் செம மழை... வானிலை ஆய்வு மையம்
மேலடுக்கு சுழற்சி காரணமாக 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என கூறப்படுகிறது
சென்னை: மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளதாலும், வெப்ப சலனம் காரணமாகவும் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக வறண்ட வானிலை நிலவியது. வெயில் ஒரு பக்கம் வாட்டி வந்த நிலையில், மக்கள் ஊரடங்கில் இன்னல்களுக்கு உள்ளாகி வந்த நிலையில், நேற்று முதல் தென் மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலையை சார்ந்த சில மாவட்டங்களிலும் ஒரு மணி நேரம் மழை பெய்தது.

நாளை முதல் தமிழகத்திற்கு தொடர்ந்து 5 நாட்கள் நல்ல மழை பெய்ய போவதாக தமிழ்நாடு வெதர்மேன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.. இந்நிலையில், சென்னை வானிலை மையமும் மழை நிலவரம் குறித்து இன்று அறிவித்துள்ளது.
அதில், "தமிழகத்தில் நிலவிவரும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக நீலகிரி, தேனி, கோயம்புத்தூர், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருப்பூர், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் லேசான மழை அல்லது மிதமான மழை பெய்யலாம்.
பிற மாவட்டங்களை பொறுத்த வரையில் வறண்ட வானிலை நிலவும், தலைநகர் சென்னையை பொறுத்த வரையில் வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருக்கும்" என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதைதவிர மழை நிலவரம் குறித்த ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.
அதில், "11-ம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது.. தேன்கனிக் கோட்டையில் 3 செமீ மழை பெய்திருக்கிறது... கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் 3 செமீ மழை பெய்திருக்கிறது. நீலகிரி மாவட்டம் கெட்டி மற்றும் குன்னூர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களில் 2 செமீ மழை பொழிந்தது.
நீலகிரி மாவட்டம் கே.பிரிட்ஜ், ஜி.பஜார், நடுவட்டம், ஊட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, கன்னியாகுமரி மாவட்டம் கீழ் கோதையாறு ஆகிய இடங்களில் ஒரு செமீ மழை பதிவாகியிருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் குறைந்திருந்தாலும் தமிழகத்தில் மழை பெய்ய உள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications