"அக்னி அனல்'.. இந்த 2 நாள் டேஞ்சர்.. கவனம் மக்களே.. வெயில் வாட்ட போகுது.. உயிரையே காவு வாங்கிடுச்சே

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 3 நாட்களாகவே தமிழ்நாட்டில் அனல் அடித்துவரும்நிலையில், அடுத்த 2 நாட்களுக்கும் வெயிலின் தீவிரம் அதிகமாகும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது..

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயில் கொளுத்தி கொண்டிருக்கிறது.. கோடை வெயிலின் வெப்பத்தில், தமிழக மக்கள் தவித்து கொண்டிருக்கிறார்கள்..

Weather: High alert announcement and temperature will increase by 4 degree celsius for the next 2 days in tamil nadu

மீனம்பாக்கம்: தலைநகர் சென்னையில், காலை முதலே வெயில் வாட்ட துவங்கி விடுகிறது. நேற்றுகூட அனல் கொளுத்தி எடுத்துள்ளது.. மீனம்பாக்கத்தில் 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும், நுங்கம்பாக்கம் மற்றும் மாதவரத்தில் 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் வாட்டி வதைத்தது. சென்னை எண்ணூரில் 103 டிகிரி வெயில் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கடந்த 2003-ம் ஆண்டு சென்னையில் 113 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது... 2014-ல் 109.4 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.. இப்போது, 8 வருடத்துக்கு பிறகு மூன்றாவது அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாக சொல்கிறார்கள்.. சென்னை மட்டுமல்ல, தமிழ்நாட்டின் பிற இடங்களிலுலும் இந்த வெயில் வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது..

அதிக வெயில் : அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் திரூரில் 110.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கடப்பாக்கம் மற்றும் வேலூரில் 108 டிகிரி பாரன்ஹீட் வெயிலும், திருத்தணி மற்றும் கரூர் - பரமத்தியில் 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் கொளுத்தியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. அதேபோல, மதுரை, திருச்சி, அருப்புக்கோட்டை, ஈரோடு மற்றும் கடலூரில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும், நாகை, ராமநாதபுரம் மற்றும் சேலம் மாவட்டங்களில் 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

காவு வாங்கிய வெயில்: தமிழ்நாட்டிலேயே எப்போதுமே வேலூர் மாவட்டத்தில் அதிக வெயில் பதிவாகும்.. அந்தவகையில் நேற்றும் வெயில் தகித்து காணப்பட்டது.. ஒரு உயிரையே காவு வாங்கியும் விட்டது.. பெய்கை சத்தியமங்கலம் கிராமத்தை சேர்ந்த பூ வியாபாரி முருகன் என்பவர் உயிரிழந்துள்ளார்.. இவர் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.. அப்போது, சிறுநீர் கழிக்க பைக்கை நிறுத்திவிட்டு சாலையோரம் நின்றிருக்கிறார்.. அப்போது திடீரென மயங்கி விழுந்து சுயநினைவு இழந்தார்..

அந்த வழியாக வந்தவர்கள் இதை பார்த்து 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் தந்து வரவழைத்தனர்.. ஆனால், முருகன் இறந்துவிட்டதாக ஆம்புலன்ஸ் குழுவினர் தெரிவித்துவிட்டனர்.. முருகனுக்கு 40 வயதாகிறது.. ஏற்கனவே சர்க்கரை, பி.பி இருக்கிறதாம்.. அளவுக்கு அதிகமாக சுட்டெரித்து வரும் வெயிலால் முருகன் உயிரிழந்திருக்கக்கூடும் என்கிறார்கள்.

சுட்டெரிக்கும் வெயில்: கடந்த 3 நாட்களாகவே வெயில் அதிகரித்து காணப்பட்ட நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெயில் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.. அதிகபட்ச வெப்ப நிலை இயல்பில் இருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்று கூறியுள்ளது.. அதேபோல, சென்னையில் 106 டிகிரி வரை உள்ள வெப்பம் 110 டிகிரி வரை எட்டக்கூடும் என்றும், இதனால் சென்னையில் வெப்ப அலை மிக கடுமையாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதுவும் இல்லாமல், தென்மேற்கு பருவமழை இந்த வருடம் தாமதமாக துவங்கியிருக்கிறது.. வழக்கமாக தென்மேற்கு பருவமழை, கேரளாவில் ஜூன் 1ல் துவங்கி, செப்டம்பர் மாதம் வரை பெய்யும்.. ஆனால், இந்த வருடம் 3 நாட்கள் தாமதமாக, அதாவது ஜூன் 4ல் பருவமழை துவங்க வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.. நாட்டில் பெய்யும் மொத்த மழை அளவில், 80 சதவீதம் தென்மேற்கு பருவமழை வாயிலாகவே கிடைக்கிறது..

கவலையில் விவசாயிகள்: விவசாயத்திற்கு பெருமளவு உதவுவது இந்த தென்மேற்கு பருவமழைதான். ஆனால், இந்த வருடம் தென்மேற்கு பருவமழை இயல்பான அளவில் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. மழைப்பொழிவு குறைந்தால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும்.. இது நாட்டின் பொருளாதாரத்தையே அசைத்து பார்த்துவிடும்.. எனவே மழைப்பொழிவு குறைவாக இருக்கப்போவதாக கூறப்படுவது, விவசாயிகளை கலக்கத்தில் ஆழ்த்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+