Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளம்பிருச்சுப்பா.. தமிழகமெங்கும் நீடிக்க போகும் மழை.. அதுவும் இத்தனை நாளுக்கா..வந்தது வானிலை அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வரும் 4ம் தேதி வரை கனமழை வெளுக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.. இதனால் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுக்க போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை வானிலை மையம் 2 நாட்களுக்கு முன்பு ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.. அதில், தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.. அதாவது, வங்கக் கடலில் சூறாவளி காற்று வீசுவதால், வரும் 2ம் தேதி வரை, மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

வானிலை மாறுபாடு: இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: "மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் வரும், 2ம் தேதி வரை, மிதமான மழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்சம், 37 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகும்.

வங்கக் கடலில், தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரி கடல் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில், மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசுகிறது. எனவே, வரும் 2ம் தேதி வரை மீனவர்கள் மேற்கண்ட கடல் பகுதிக்குள் செல்ல வேண்டாம். நேற்று காலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, கோவை சின்னக்கல்லாரில், 5 செ.மீ., மழை பதிவாகி உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

weather news and moderate rain in tamil nadu on july 4, says meteorological department

பலத்த மழை: இந்நிலையில், நேற்றைய தினம் இன்னொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. அதில், வரும் 4ம் தேதிவரை தமிழகத்துக்கு பலத்தமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும், தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி காரணமாகவும், மழை நீடிக்கும் என்றும் அறிவித்துள்ளது.

இன்று ஜூலை 1ம் தேதி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நாளை 2ம் தேதி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில், முக்கியமாக நீலகிரி, கோயம்புத்தூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது.

திண்டுக்கல்: 3ம் தேதி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில், குறிப்பாக, திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யவாய்ப்புள்ளது

4ம் தேதி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜூன் 30-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் 6 செ.மீ., சத்யபாமா பல்கலைக்கழகம், புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, நீலகிரி மாவட்டம் பந்தலூர் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மழை நீடிப்பு: ஜூலை 2ம் தேதி வரை மழை பெய்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது ஜூலை 4 வரை மழை இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+