குட்நியூஸ்.. வாட்டி எடுக்கும் வெயிலுக்கு இடையில்.. சட்டென மாறும் கிளைமேட்.. இன்று முதல் கனமழை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்றில் இருந்து 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுக்க வெயில் வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறது. கடந்த 4 நாட்களாக வெப்ப காற்றும் வடமாநிலங்களில் வீசி வருகிறது வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் 35.9 டிகிரி செல்ஸியஸ் முதல் 37.78 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை பதிவாகி இருக்கிறது .

குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானாவில் வெப்பநிலை மிக அதிகமாக பதிவாகி இருக்கிறது. மத்திய இந்தியாவில் ஏப்ரல் மாதம் சராசரியாக 37.78 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. வடமேற்கு இந்தியாவில் 35.9 டிகிரி செல்ஸியஸ் பதிவாகி உள்ளது.

 வெப்ப அலை

வெப்ப அலை

அதோடு நாடு முழுக்க வெப்பம் மிக அதிகமாக இருக்கும். வரும் நாட்களில் வெப்ப அலை மோசமாக இருக்கும். மக்கள் இதனால் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது பல்வேறு மாநிலங்களில் நிலவும் வெப்பநிலை சராசரி அளவை விட 3.35 டிகிரி செல்சியஸ் அதிகம் ஆகும். மும்பையில் தார் பாலைவனத்தில் இருப்பதை விட அதிக வெப்பநிலை பதிவானது. அங்கே 40 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு முன் 3 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி உள்ளது.

மோசமான வானிலை

மோசமான வானிலை


ஈரோடு, சேலம், நாமக்கல்லில் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு அதிகமாக வெப்பம் பதிவானது. ஈரோட்டில் நேற்று 100.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. சேலத்தில் 100.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. அதேபோல் நாமக்கல்லில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. வரும் நாட்களில் தமிழ்நாட்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல மாநிலங்களில் வெப்ப அனல் காற்று வீச தொடங்கி உள்ளது. கடும் கோடை வெயிலுக்கு இடையில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கீழடுக்கு சுழற்சி

கீழடுக்கு சுழற்சி

தென்இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் சுழற்சி ஏற்பட்டு உள்ளது. இங்கே கிழக்கு திசை மற்றும் மேற்கு திசை காற்று வீசும் இடங்களில் சுழற்சி ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும். , திண்டுக்கல், ஈரோடு சேலம், கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, மாவட்டங்களில் கனமழை பெய்யும். திருப்பூர், தேனி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நீலகிரி, கோவை, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் லேசான மழை விட்டு விட்டு பெய்யும்.

5ம் தேதி வரை

5ம் தேதி வரை

திண்டுக்கல், ஈரோடு சேலம், கரூர், திருப்பூர், தேனி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நீலகிரி, கோவை, நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் நாளையும் பின்னர் நாளை மறுநாளும் லேசான மழை பெய்யும். இதே மாவட்டங்களில் 5ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான சாரல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்தோடு காணப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+