நேற்று வரை வாட்டி எடுத்த வெயில்.. இன்று சட்டென கனமழை.. சென்னையில் திடீர் மாற்றம்! இப்படி ஒரு காரணமா?

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக மக்கள் பலர் மகிழ்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்று காலையில் இருந்து திடீரென கனமழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் சென்னையில் கனமழை பெய்து வருகிறது.

நாடு முழுக்க வெயில் வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறது. கடந்த 4 நாட்களாக வெப்ப காற்றும் வடமாநிலங்களில் வீசி வருகிறது வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் 35.9 டிகிரி செல்ஸியஸ் முதல் 37.78 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை பதிவாகி இருக்கிறது . பல மாநிலங்களில் வெப்ப அனல் காற்று வீச தொடங்கி உள்ளது.

குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானாவில் வெப்பநிலை மிக அதிகமாக பதிவாகி இருக்கிறது. மத்திய இந்தியாவில் ஏப்ரல் மாதம் சராசரியாக 37.78 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. வடமேற்கு இந்தியாவில் 35.9 டிகிரி செல்ஸியஸ் பதிவாகி உள்ளது.

சென்னை

சென்னை

இது சராசரி அளவை விட 3.35 டிகிரி செல்சியாஸ் அதிகம் ஆகும். மும்பையில் தார் பாலைவனத்தில் இருப்பதை விட அதிக வெப்பநிலை பதிவானது. அங்கே 40 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு முன் 3 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி உள்ளது. ஈரோடு, சேலம், நாமக்கல்லில் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு அதிகமாக வெப்பம் பதிவானது. ஈரோட்டில் நேற்று 100.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. சேலத்தில் 100.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. அதேபோல் நாமக்கல்லில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. வரும் நாட்களில் தமிழ்நாட்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று வானிலை

நேற்று வானிலை


நேற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது. நேற்று சேலத்தில் 100 நேற்றும் டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. தொடர்ந்து இரண்டாவது நாளாக தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரித்து உள்ளது. தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் உயர்ந்து உள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் வெப்பம் 93 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவானது. வேலூரில் 97 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவானது. ஈரோடு, நாமக்கல்லில் 99 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானது. வரும் நாட்களில் இந்த பகுதிகளில் மேலும் வெப்பம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிசயம்

அதிசயம்

இந்த நிலையில் அதிசயமாக சென்னையில் இன்று காலையில் இருந்து மழை பெய்து வருகிறது. 9 மணிக்கு தொடங்கிய மழை பிச்சு எடுத்துக்கொண்டு இருக்கிறது,. பெரும்பாலான இடங்களில் மழை விடாமல் பெய்து வருகிறது. அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி பகுதிகளில் அதிகாலையில் கனமழை பெய்தது. வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் 2 மணி நேரமாக மழை பெய்தது மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது மழை பெய்ய தொடங்கி உள்ளது விடாமல் பெய்யும் மழை காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

என்ன காரணம்?

என்ன காரணம்?

பொதுவாக மார்ச் மாதத்தில் இப்படி மழை பெய்து. இப்போது மழை பெய்ய இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெய்யும் மழை. இரண்டாவது மேற்கு பள்ளத்தாக்கு காற்று காரணமாக ஏற்பட்டு உள்ள மழை. இந்த இரண்டு நிகழ்வுகளும் சேர்ந்து மழை மேகங்களை சென்னை நோக்கி அனுப்பி இருக்கிறது. இதுவே திடீரென மழை பெய்ய காரணம் ஆகும்., வானிலையில் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றம் காரணமாக மக்கள் பலரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+