ஹே.. நனைகிறது தமிழ்நாடு.. இன்னும் 5 நாளைக்கு மழை இருக்காம்.. துள்ளிக்குதிக்கும் மாவட்டங்கள்

இன்று முதல் வரும் 18ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் 18ம் தேதி முதல் தமிழ்நாட்டுக்கு மழை இருக்க போகிறதாம்.. இந்த குட் நியூஸை சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது...

தமிழகம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாகவே தென்மேற்கு பருவமழையால் நல்ல மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம், சென்னை வானிலை மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.. அதில், காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில், மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்திருந்தது.

 6 மாவட்டங்கள்

6 மாவட்டங்கள்

எனவே, காற்றழுத்த தாழ்வு மாற்றங்கள் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று அதாவது 15 ம் தேதியும் கனமழை தொடரும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.. அதன்படி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களின் மலை பகுதிகளில், கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியிருந்தது... அதன்படியே மாவட்டங்களில் கனமழை பெய்தது..

 வீசும் காற்று

வீசும் காற்று

இதனிடையே, நேற்று மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியானது.. அதில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தொடர்ந்து 18-ம் தேதி வரை, தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது... இதுதான் அந்த அறிக்கை: "14.09.2022 மற்றும் 15.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

 இடியும் மின்னலும்

இடியும் மின்னலும்

16.09.2022 மற்றும் 17.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 18.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மழை - மலை - மாவட்டங்கள்

மழை - மலை - மாவட்டங்கள்

நேற்று முன்தினம் வெளியான வானிலை அறிக்கையிலும், காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில், 15 ம் தேதி, அதாவது இன்றைய தினம் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.. அந்தவகையில், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், உள்ளிட்ட 5 மாவட்ட மலை பகுதிகளில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+