ஹெவி ரெயின்.. இந்த 5 மாவட்டங்களில் இன்று வெளுக்க போகும் மழை.. நாளை, நாளை மறுநாளும் மழை இருக்காம்

தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு இன்று மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் மீண்டும் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் 2 நாட்களுக்கு முன்பு ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டிருந்தார்.

அதில், "ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டி நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது. தெற்கு ஒடிசா பகுதிகளில் நிலவும் இந்த மண்டலம், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும்.

வங்கக்கடல்

வங்கக்கடல்

இதன் காரணமாக, வங்கக் கடலில் மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.. மத்திய மேற்கு வங்கக் கடல், வடக்கு ஆந்திர கடலோரம், மன்னார் வளைகுடா, தமிழக தென் கடலோர பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதிகளிலும் சூறாவளி காற்று வீசும்.மேலும், கேரள, கர்நாடக அரபிக்கடல் பகுதிகளிலும், மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே மீனவர்கள் வரும், 14ம் தேதி வரை இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

 ஹெவி ரெயின்

ஹெவி ரெயின்

அதுமட்டுமல்லாமல், தொடர்ந்து 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் கூறியிருந்தார்.. அதாவது, 11-ம் தேதி முதல் 15ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று எச்சரித்து கூறியிருந்தார்.. அந்தவகையில், இன்றும், நாளையும், நாளை மறுதினமும் என தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறியிருந்ததும் சென்னைவாசிகளுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.

 5 மாவட்டங்களுக்கு மழை

5 மாவட்டங்களுக்கு மழை

அந்தவகையில், இன்றைய தினம் 13ம் தேதி தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு நல்ல மழை இருப்பதாக மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.. சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றொரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.. அதில் உள்ளதாவது: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, சில மாவட்டங்களில் கன மழை பெய்யும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்.. சென்னை உட்பட சில மாவட்டங்களில், இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அதிகபட்சம், 36 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவாகும்" என்று கூறப்பட்டுள்ளது.

வார்னிங்

வார்னிங்

இன்றைய தினம், 13ம் தேதி, மன்னார்‌ வளைகுடா, தமிழக கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 65 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌ என்றும் வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌ என்றும் வானிலை மையம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+