"அடைமழை"தான் அடுத்த 2 நாட்களுக்கு.. இந்த 6 மாவட்ட மக்களும் கவனம்.. வந்தது புது அறிவிப்பு
இன்றும் நாளையும் தமிழகம் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது
சென்னை: காற்றழுத்த தாழ்வு மாற்றங்கள் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் இன்றும் நாளை 15 ம் தேதியும் தமிழகத்தில் கனமழை தொடரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.. அந்த வகையில் 6 மாவட்டங்களுக்கு இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாகவே தென்மேற்கு பருவமழையால் நல்ல மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.

வலு குறையும்
இதனால் தமிழகத்தில் மேலும் பல பகுதிகளில் கனமழை நீடிக்கும் நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறையும் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டி நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளதால், தெற்கு ஒடிசா பகுதிகளில் நிலவும் இந்த மண்டலம், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்றும், இதன் காரணமாக, வங்கக் கடலில் மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும்..

சூறாவளி
மத்திய மேற்கு வங்கக் கடல், வடக்கு ஆந்திர கடலோரம், மன்னார் வளைகுடா, தமிழக தென் கடலோர பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதிகளிலும் சூறாவளி காற்று வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது. மேலும், கேரள, கர்நாடக அரபிக்கடல் பகுதிகளிலும், மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சின்னக்கல்லார்
மேலும், மீனவர்கள் வரும், 14ம் தேதி வரை அதாவது இன்றைய தேதிவரை இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனர்.. இந்நிலையில் மற்றொரு வானிலை அறிக்கை வெளியாகி இருந்தது.. அதில், காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில், 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

6 மாவட்டங்கள்
எனவே, காற்றழுத்த தாழ்வு மாற்றங்கள் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் இன்றும் நாளை 15 ம் தேதியும் கனமழை தொடரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.. காற்றழுத்த தாழ்வு மாற்றங்கள் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் நாளை வரை கனமழை தொடரும். அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் மலை பகுதிகளில், இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியிருக்கிறது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications