நேற்று மாலை முழுக்க கொட்டித்தீர்த்த மழை.. இன்றும் தமிழகத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்யும்!
தமிழகத்தில் நேற்று பல இடங்களில் பரவலாக சூறாவளிக்காற்றுடன் கனமழை பெய்தது.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் நேற்று பல இடங்களில் பரவலாக சூறாவளிக்காற்றுடன் கனமழை பெய்தது. இன்றும் தமிழகத்தில் பல இடங்களில் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் தற்போது கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான வானிலை காணப்படுகிறது. கடந்த மே 4ம் தேதி தமிழகத்தில் அக்னி வெயில் தொடங்கியது. ஆனால் அதற்கான எந்த சுவடும் தற்போது தமிழகத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அக்னி வெயில் நிலவி வரும் வேளையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முழுக்க மழை பெய்தது. முக்கியமாக பலத்த காற்றுடன் இரவு முழுக்க மழை பெய்தது.
திருத்தணியில் கடந்த சில நாட்களாக 100 டிகிரியை தாண்டி வெப்பநிலை இருந்தது. இதனால் அங்கு மக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். ஆனால் நேற்று திடீர் என்று அங்கு சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் அங்கு கடுமையான காற்று வீசியது.
அதேபோல் வேலூரிலும் அதீத சூறாவளிக்காற்றுடன் மழை கொட்டித்தீர்த்தது. அதேபோல் திருவண்ணாமலையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியில் மழை பெய்தது.
கிருஷ்ணகிரியில் ஊத்தங்கரை உள்ளிட்ட இடங்களில், அவனாசியில் நீண்ட நேரம் மழை பெய்தது. உதகை, நாமக்கல், திருச்சி, திருச்செங்கோடு ஆகிய இடங்களிலும் கனமழை பெய்தது. இதேபோல் தமிழகத்தில் பல பகுதிகளில் நேற்று மழை பெய்தது.
இந்த நிலையில் இன்றும் தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. முக்கியமாக கடந்த சில நாட்களாக மழை பெய்யாத, திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதேபோல் சென்னையில் இன்று மாலைக்கு மேல் மழை பெய்யலாம்.












Click it and Unblock the Notifications