இதுக்கு பேருதான் அக்னி நட்சத்திரமா? தமிழ்நாட்டில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு.. எங்கெல்லாம் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தெற்கு அந்தமான் கடல், நிக்கோபார் தீவுகள், தென்கிழக்கு வங்கக்கடலில் தென்மேற்கு பருவமழை நேற்று தொடங்கியதாக இந்திய வானிலை மையம் அறிவித்தது. இதனால் கேரளா, தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் தீவிர கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமானில் 22ம் தேதிதான் பருவமழை தொடங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த முறை 15ம் தேதியே தொடங்கி உள்ளது.

 தென்மேற்கு பருவமழை

தென்மேற்கு பருவமழை

இந்த பகுதியில் வரும் நாட்களில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாடு, கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களும் ஹை அலர்ட்டில் இருக்க வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது. இன்னொரு பக்கம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று மழை

இன்று மழை

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று 16.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் (நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர்), சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை என்ன நிலவரம்

நாளை என்ன நிலவரம்

நாளை 17.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் (நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர்), சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 நாளை மறுநாள்

நாளை மறுநாள்


18.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் (நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர்), கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், கரூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

19.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 சென்னை

சென்னை

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். சென்னையில் நேற்று ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்தது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

Recommended Video

    வேலூர்: 1 மணி நேரம் வெளுத்த மழை: விவசாயிகள், பொதுமக்கள் Happy!
    மீனவர்களுக்கான எச்சரிக்கை

    மீனவர்களுக்கான எச்சரிக்கை

    15.05.2022 முதல் 17.05.2022 வரை: மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று சென்னை வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. கோடை காலத்திற்கு இடையில் தமிழ்நாட்டில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+