தமிழக கடலோர மாவட்டங்களில் சூரியன் சுடும் ...தென்காசி,நெல்லை, குமரியில் இடியோடு மழை பெய்யும்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தென்காசி, நெல்லை,குமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவ
சென்னை: தமிழக கடலோர மாவட்டங்களில் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திர காலம் ஆரம்பமாகி விட்டது பல நகரங்களில் சூரியன் சுட்டெரித்து வருகிறது. சில ஊர்களில் வெயிலோடு மழையும் பெய்து வருகிறது. தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழக கடலோர மாவட்டங்களில் 10,11ஆம் தேதிகளில் இயல்பை விட 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.

இடி மின்னலுடன் மழை
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், உள் கர்நாடகா முதல் கேரளா வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வெப்பச்சலனம் காரணமாக வட தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள்
நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலியில் இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 9ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்கள்,புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும்.

மே 10,11 தேதிகளில் மழை
10 மற்றும் 11ஆம் தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், ஈரோடு, தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலை நிலவும்.

வெப்பநிலை அதிகரிப்பு
கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். இயல்புக்கு அதிகமாக வியர்க்கும். புழுக்கம் அதிகரிக்கும். 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை மேற்கு வடமேற்கு திசையில் இருந்து தரைக்காற்று வீச வாய்ப்பு உள்ளதால் கடலோர மாவட்டங்கள் உள் மாவட்டங்களில் தற்போது உள்ள வெப்ப நிலையை விட 4 முதல் 5 டிகிரி வரை வெப்பநிலை உயரக்கூடும். மாலை முதல் காலை வரை வெக்கையும் புழுக்கமும் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications