சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீலகிரி, கோவை, தேனியில் இடியுடன் மழை பெய்யும்... 5 நாட்களுக்கு குடை அவசியம் மக்களே

நீலகிரி, கோவை, தேனியில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி ,கோயம்புத்தூர் ,தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான திருப்பூர்,திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு :

வெப்ப சலனம் காரணமாக நீலகிரி ,கோயம்புத்தூர் ,தேனி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எஞ்சிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர், திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

 Weather report Today: Nilgiris, Coimbatore, Theni, it will rain with thunder

தென்மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள், ஈரோடு, சேலம் , நாமக்கல், கிருஷ்ணகிரி, திருச்சி , திருவண்ணாமலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய கூடும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

15ஆம் தேதி நீலகிரி ,கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அதேபோல் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உண்டு

16 மற்றும் 17ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் ,திண்டுக்கல், தேனி ,தென்காசி மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் சாரலும் தூரலுமாய் பெய்த மழை... ஜில்லென மாறிய வானிலை சென்னையில் சாரலும் தூரலுமாய் பெய்த மழை... ஜில்லென மாறிய வானிலை

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

இன்று முதல் 18ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு தென் மேற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

English summary
The Chennai Meteorological Department has forecast heavy rains in the Nilgiris, Coimbatore and Theni districts due to global warming in Tamil Nadu. The Met office said that there is a possibility of thundershowers in Tirupur, Dindigul, Tenkasi and Kanyakumari districts along the Western Ghats.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X