காற்றழுத்தம் எங்கே இருக்கிறது?.. தமிழகம் நோக்கி நகர்கிறதா?.. என்ன சொல்கிறது வெதர் ரிப்போர்ட்?
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தமானது தற்போது எங்கே இருக்கிறது என்பது குறித்து வானிலை மையம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தமானது நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இது மேலும் தற்போது சென்னையிலிருந்து 670 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டிருக்கிறது. அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு- வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தமிழகம், புதுவை, ஆந்திரா ஆகிய மாநில கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும்.

தமிழகம்
இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் இன்றைய தினம் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையிலும் அடுத்த 48 மணி நேரத்தில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் வரும் 23 ஆம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மிக கனமழை
தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த எச்சரிக்கையை வானிலை மையம் வாபஸ் பெற்றது. நாளை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

புதுவை
அது போல் நவம்பர் 22ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நவம்பர் 23ஆம் தேதியில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பனிப்பொழிவு
கடந்த 4 நாட்கள் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் பகல் நேரங்களில் கூட குளிர் வாட்டி எடுக்கிறது. பனி அதிகமாக இருந்தால் மழை பெய்யாது என்பார்கள், அது போல் இந்த பனியால் மழை பெய்யாமல் பனிவிலகிய பிறகு மழைக்கு சாதகமான சூழல் உருவாகி மழை பெய்யும் என கூறப்படுகிறது. நாளை கடல் காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. தூரம் வரை வீசும் என்பதால் கடலில் குளிப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறதார்கள்.
-
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications