உருவாகுது மேலடுக்கு சுழற்சி... வரப்போகுது கனமழை.. 3 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
Recommended Video
சென்னை: இலங்கைக்கு தென்கிழக்கே தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளி மண்டல சுழற்சி நிலை கொண்டுள்ளதன் காரணமாக கடலோர தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி. ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழைபெய்தது.
இதேபோல் செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், திருவாரூர் ,தஞ்சை, நாகபபட்டினம், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் நல்ல மழைபெய்தது. இதேபோல் கோவை, திருப்பூர்,ஈரோடு, நீலகிரி, சேலம் உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

வெள்ளக்காடு
இதனிடயே செங்கல்பட்டு, சென்னை, கடலூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், கோவை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 100 மில்லிமீட்டருக்கு சிலமுறை மழை பெய்தது. இதனால் பல இடங்களில் வெள்ளக்காடாக மாறியது.

தென்மாவட்டங்களில்
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழை கொஞ்சம் ஓய்ந்திருக்கிறது. பெரிய அளவில் தமிழத்தில் எங்குமே மழை இல்லை. இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உருவாகி உள்ளது.

மழைக்கு வாய்ப்பு
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைக்கு தென்கிழக்கே தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளி மண்டல சுழற்சி நிலை கொண்டுள்ளதன் காரணமாக கடலோர தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,

தூத்துக்குடி
இதேபோல் வளிமல்ணட மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிக மழை எங்கு
கடந்த நவம்பர் 1ம் தேதி முதல் இன்று வரை (டிச 9வரை) நிலவரப்படி தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் இயல்பை 77 சதவீதம் அதிகமாக (765 மிமீ) மழை பெய்திருப்பதாகவும் அதற்கு அடுத்தபடியாக ராமநாதபுரத்தில் 66 மில்லிமீட்டர் அதிகமாகவும், திருநெல்வேலியில் 53 மில்லி மீட்டர் அதிகமாகவும், புதுக்கோட்டையில் 43 மில்லிமீட்டர் அதிகமாகவும், கோவையில் 36 மிமீ அதிகமாகவும் மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குறைவானமழை
புதுச்சேரி, பெரம்பலூர், வேலூர், திருச்சி, திருப்பூர், மதுரை, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பைவிட குறைந்தபட்சமாகவே வடகிழக்கு மழை பெய்திருக்கிறது












Click it and Unblock the Notifications