குட் நியூஸ்.. நவ. 4 முதல் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு.. 4 நாட்கள் நீடிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன்
சென்னை: நவம்பர் 4-ஆம் தேதி முதல் சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிவிட்டது. கடந்த 29-ஆம் தேதி முதல் தொடங்கியதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதற்கான முன்னோட்டமாக 28-ஆம் தேதி இரவு முதல் அதிகாலை வரை சென்னையில் கனமழை பெய்தது.
தினமும் இரவு நேரங்களில் மார்கழி மாதக் குளிர் போல் சென்னையில் நிலவி வருகிறது. இது காலை 10 மணி வரை நீடிக்கிறது. இந்த நிலையில் நவம்பர் 4-ஆம் தேதி முதல் சென்னையில் நல்ல மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தினந்தோறும்
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில் தென் தமிழகத்தில் தினந்தோறும் மழை பெய்து வருகிறது. ஆனால் நேற்று இரவு மதுரையில் கனமழை பெய்தது. மதுரையில் முதல் சென்சுரியாக 102 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதையடுத்து விரகனூரிலும் 102 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

அரபிக் கடல்
அது போல் ராமநாதபுரத்தில் 71 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இன்று முதல் தமிழகத்தின் மேற்கு பகுதிகளுக்கு மழை குறையும். மேற்கு தமிழகமான கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு மழை பெய்ய வேண்டுமானால் அரபிக் கடலில் கிழக்கு திசை காற்று உருவாகும்.

காற்றின் திசை
இல்லாவிட்டால் மேலடுக்கு சுழற்சி நிலவும். அதுவும் இல்லாவிட்டால் காற்றின் திசை மாறுப்பட்டு இடியுடன் கூடிய கனமழையை கொடுக்கும். மேலடுக்கு சுழற்சி வட தமிழக கடலோரம் அல்லது மத்திய வங்கக் கடலில் நிலவினால் கடலோர பகுதிகளுக்கு நல்ல மழை பெய்யும். கேரளாவுக்கும் நல்ல மழைப் பொழிவை கொடுக்கும். வரும் காலங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்.

டெல்டா மாவட்டங்கள்
அடுத்த மழை சென்னை மற்றும் 100 கி.மீ. தூரம் வரை உள்ள மாவட்டங்கள், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலோர தமிழகம், டெல்டா மாவட்டங்கள் ஆகிய இடங்களில் 4-ஆம் தேதி முதல் மழை பெய்யும். இந்த மழைக்கான மேலடுக்கு சுழற்சி இலங்கை கடலோரத்தில் தென்மேற்கு பகுதியில் உருவாகும். இதனால் புதுவை, காரைக்கால், கடலூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் மழை கொடுக்கும். இந்த மழை 4 முதல் 5 நாட்கள் வரை நீடிக்கும் என தெரிவித்துள்ளார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications