ரூ.1000 கலைஞர் உரிமைத் தொகை.. மகளிருக்கு பெரும் தீர்வு! இனி இந்த இணையதளத்தை திறந்தால் போதும்
சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில், உரிமைத் தொகை விண்ணப்பங்களின் நிலையை அறிய இணையதளத்தை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது.
2021 தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதியின்படி, கடந்த சில மாதங்களுக்கு முன் மகளிர் உரிமைத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாகக் கருதப்பட்டு ஒவ்வொரு தகுதி வாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத் தலைவி மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

குடும்ப அட்டையில் குடும்பத் தலைவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பெண் குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார் என்றும் குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அந்தக் குடும்பத் தலைவரின் மனைவி குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார் எனவும் அரசு அறிவித்தது.
ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், 5 ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள், ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களின் தலைவிகள் இதில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
ரூ.2.5 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்கள், குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள், ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டி தொழில் வரி செலுத்துவோர் விண்ணப்பிக்க முடியாது என அறிவிக்கப்பட்டது.
அதேபோல், மத்திய மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இதை பெற முடியாது.
அதேபோல் சொந்தப் பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள். ஆண்டுக்கு ரூ.50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை செய்து ஜிஎஸ்டி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள், ஏற்கனவே தொடர் சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்ப தலைவர்களும் இதை பெற முடியாது என அரசு அறிவித்தது.
இந்த விதிமுறைகளுடன் கடந்த ஜூலை 24 - ஆகஸ்டு 5 வரை முதல் கட்ட முகாம், ஆகஸ்டு 14 வரை 2 வது கட்ட முகாம், ஆகஸ்டு 18 முதல் 20 ஆம் தேதி வரை சிறப்பு முகாம் என மூன்று கட்டங்களாக முகாம்கள் நடத்தப்பட்டு பெறப்பட்ட விண்ணப்பங்கள் அரசுக்கு அனுப்பி வைத்து, அது பல்வேறு கட்டங்களாக சரிபார்க்கப்பட்டு 1 கோடியே 6 லட்சத்து 5 ஆயிரம் மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களுக்கான SMS அனுப்பி வைக்கப்பட்டு வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் விண்ணப்பதாரர்களுக்கு உதவும் வகையில் இணையதளத்தை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்து உள்ளது. https://kmut.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று ஆதார் எண்ணை கொடுத்து ஓடிபி நம்பரை கொடுத்து விபரங்களை பெற முடியும்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications