குறைகிறது புதிய கேஸ்கள்.. இந்தியாவில் சரியும் கொரோனா கிராப்.. ஆனால்.. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!
சென்னை: இந்தியாவில் கடந்த வாரத்தில் புதிய கொரோனா கேஸ்கள் பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது. மே மாதம் முதல் 10 நாட்கள் பதிவான கொரோனா கேஸ்களை விட மே 10-16 வரை குறைவாக கேஸ்கள் இந்தியாவில் பதிவாகி உள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை கடந்த சில வாரங்களாக வேகமாக பரவிக்கொண்டு இருந்த நிலையில், புதிய கொரோனா கேஸ்கள் குறைய தொடங்கி உள்ளது. இந்தியாவில் தற்போது வரை கொரோனா காரணமாக 24,965,463 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதில் 274,411 பேர் பலியாகி உள்ளனர். 21,174,076 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். ஆக்டிவ் கொரோனா கேஸ்கள் 3,516,976 ஆக உள்ளது.

குறைவு
இந்தியாவில் தினசரி பதிவாகும் புதிய கொரோனா கேஸ்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி உள்ளது. கடந்த வார்த்தையும், அதற்கு முன்தைய வாரத்தையும் ஒப்பிடும் போது கொரோனா கிராப் பெரிய அளவில் சரிவை சந்தித்து உள்ளது தெளிவாகிறது. கடந்த வாரம் இந்தியாவில் ஒப்பீட்டளவில் குறைவாகவே கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது.

கடந்த வாரம்
இந்தியாவில் கடந்த வாரம் முழுக்க மொத்தமாக 24 லட்சம் புதிய கொரோனா கேஸ்கள் பதிவானது. இது அதற்கு முந்தைய வாரத்தை விட 16% குறைவான கேஸ்கள் ஆகும். இந்தியாவில் கடந்த வாரத்திற்கும் முந்தைய வாரம் 27.4 லட்சம் கேஸ்கள் பதிவானது. அதாவது கடந்த வாரத்தில் மொத்தம் 3.4 லட்சம் கேஸ்கள் குறைவாக பதிவாகி உள்ளது.

கேஸ்கள்
கடந்த மே 10-16 ம் தேவை வரையிலான ஒரு வாரத்தில் பதிவான கேஸ்கள்தான் இரண்டாம் அலையில் இந்தியாவில் பதிவான மிக குறைவான ஒரு வார கேஸ்கள் ஆகும். அதோடு நேற்று இந்தியாவில் 3 லட்சத்திற்கும் குறைவாக, 2,82,086 புதிய கேஸ்கள் பதிவானது. ஏப்ரல் 20க்கும் பின் இந்தியாவில் முதல்முறை இப்படி 3 லட்சத்திற்கும் குறைவாக கேஸ்கள் பதிவாகி உள்ளது.

சரிவு ஏற்பட்டுள்ளது
மே 6ம் தேதி பதிவான 4.14 லட்சம் கேஸ்களோடு ஒப்பிட்டால் நேற்று புதிய கேஸ்களில் 30% சரிவு ஏற்பட்டுள்ளது. 9 நாட்களில் புதிய கேஸ்கள் இவ்வளவு பெரிய சரிவை சந்தித்துள்ளது. ஆனால் இந்தியாவில் இன்னும் கொரோனா காரணமாக ஏற்படும் இறப்புகள் குறையவில்லை. மாறாக இது அதிகரித்த வண்ணம் உள்ளது.

எத்தனை பேர் பலி
இந்தியாவில் கடந்த வாரம் மட்டும் 28334 பேர் பலியாகி உள்ளனர். தினசரி சராரியாக 4048 பேர் பலியாகி உள்ளனர். கடந்த வாரத்திற்கு முந்தைய வாரத்தை விட கடந்த வாரத்தில் பலி எண்ணிக்கை 4% உயர்ந்துள்ளது . கடந்த வாரத்திற்கு முந்தைய வாரத்தில் இந்தியாவில் 24282 கேஸ்கள் மட்டுமே பதிவான நிலையில் கடந்த வாரம் பலி எண்ணிக்கை (2961 கூடுதல் பலி) அதிகரித்துள்ளது.

கொரோனா மரணம்
நேற்றும் கூட இந்தியாவில் 4100 பேர் கொரோனாவிற்கு பலியானார்கள். கடந்த வாரம் மட்டும் நான்கு முறை ஒருநாள் பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிராவில் மட்டும் நேற்று 974 பலி எண்ணிக்கையும் தமிழகத்தில் 311 பலி எண்ணிக்கையும் பதிவானது. இந்தியாவில் கொரோனா கேஸ்கள் பெரிய அளவில் சரிந்து இருந்தாலும், பலி எண்ணிக்கை இப்படி அதிகரிப்பது கவலையை அளித்துள்ளது.
-
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்!












Click it and Unblock the Notifications