சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருவாரூர் தொகுதியில் களம் காண மு.க. ஸ்டாலின் விருப்பம்.... திருமாவளவன் வரவேற்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    திருவாரூரில் ஸ்டாலின் போட்டியிட விரும்புவது வரவேற்கத்தக்கது-திருமாவளவன்-வீடியோ

    சென்னை: திருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட விரும்புவதாக கூறியிருப்பதை வரவேற்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    மெட்ரோ பணிக்காக, சென்னை ஐசிஎப் கக்கன்ஜி பகுதியில் 43 ஆண்டுகளாக உள்ள தேவாலயத்தை அகற்றக் கூடாது என்று அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்தினை பேராயர் சற்குணம் மற்றும் திருமாவளவன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    [நான், எனது என எப்போதும் தற்பெருமை தான் பேசுவீர்களா? பிரதமர் மோடியின் பேட்டியை விமர்சித்த காங்கிரஸ்]

    அரசியல் உள் நோக்கம்

    அரசியல் உள் நோக்கம்

    குடிசை மாற்று வாரியத்தின் அனுமதியுடன் இயங்கி வரும் இந்த தேவாலயத்தை அரசு இடிக்க கூடாது என்றார். ஒரே ஒரு தொகுதிக்கு மட்டும் தேர்தல் அறிவித்து இருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
    ஒரே ஒரு தொகுதிக்கு தேர்தல் அறிவித்து இருப்பதில் அரசியல் உள் நோக்கம் இருக்கிறது.

    வரவேற்கிறேன்

    வரவேற்கிறேன்

    திருவாரூர் தொகுதியில் ஸ்டாலின் போட்டியிடுவதை நான் வரவேற்கிறேன். ஆளுநர் 7 தமிழர்களை விடுதலை செய்வதில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார். சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தையும் கிடப்பில் போட்டுள்ளார். மாநில அரசின் தேவையை நிறைவேற்றாமல், மத்திய அரசின் தேவைகளை மட்டும் நிறைவேற்றுபவராக ஆளுநர் இருக்கிறார்.

    மோடி பேசாமல் இருந்தது நல்லது

    மோடி பேசாமல் இருந்தது நல்லது

    மோடி தமிழகத்தை பற்றி எதுவும் பேசாமல், தாமரை மலரும் என்று மட்டும் பேசுகிறார்.
    ஒரு வகையில் அவருடைய பத்திரிகையாளர் நேர்காணலின் போது, தமிழகத்தை பற்றி எதுவும் பேசாமல் இருப்பது கூட நல்லது தான்.

    சந்தேகம் இருக்கிறது

    சந்தேகம் இருக்கிறது

    ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து, அமைச்சர்களுக்கு கூட முழுமையாக தெரியாமல் இருப்பதும், அதிகாரிகளும் அமைச்சர்களும் இந்த விவகாரத்தில் மாறுபட்ட கருத்துகளை கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஆறுமுகசாமி ஆணையம் இந்த விவகாரத்தை நடுநிலையோடு கையாளுமா, அல்லது ஏதேனும் அரசியல் நெருக்கடிகளுக்கு உள்ளாகுமா என்ற சந்தேகம் இருக்கிறது என்றும் கூறினார்.

    English summary
    Thirumavalavan said that Welcoming Of DMK leader Stalin contesting in Tiruvarur constituency.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X