"இடிக்குதே".. பிடிஆரின் பதவி மாற்றம் எதுக்காக தெரியுமா? என்னாது "இதுதான்" காரணமா.. ஒண்ணுமே புரியலயே
சென்னை: பிடிஆருக்கான பதவி மாற்றம் நடந்து 2 நாட்கள் ஆன போதிலும் அதற்கான சலசலப்புகள் இன்னமும் குறையவில்லை.. இது தொடர்பான விவாதங்கள் இன்னமும் நடந்து கொண்டுதான் உள்ளன.
பிடிஆர் பதவி மாற்றம் பல்வேறு விவாதங்களை கிளப்பி விட்டு வருகிறது.. அத்துடன் எதற்காக பிடிஆர் பதவி மாற்றம் செய்யப்பட்டார் என்ற சந்தேகங்களும், யூகங்களும் இன்னமும் சோஷியல்மீடியாவில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
வருவாய் ஈட்டுவது, கடனை குறைப்பது, புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது, நிதி சரியான முறையில் பயன்படுத்தப்படுகிறதா என்ற பல்வேறு விவகாரங்களில் கவனம் செலுத்தி, நேரடியாகவே அவைகளை கண்காணித்தவர்..

செலவுகள்: இவைகளுடன் ஆளுநர் மாளிகையின் செலவீனத்தில் கணக்கு கேட்டதும் இணைந்து கொண்டது, பிடிஆருக்கான நெருக்கடியை உருவாக்கியது.. கடைசியில், உறுதிப்படுத்தப்படாத ஆடியோ விவகாரத்தில் வந்து விவகாரம் முடிந்தது ஒரு தரப்பினர் சொல்கிறார்கள்.
மதுரை மாநகராட்சியின் மேயர் தேர்தலில், அமைச்சர் பி.மூர்த்தி, பொன்முத்துராமலிங்கம், தளபதி ஆகியோர் முன்நிறுத்திய வேட்பாளர்கள், ஓரங்கட்டப்பட்டு, பிடிஆர் முன்நிறுத்திய வேட்பாளரான இந்திராணியையே கட்சித்தலைமை மேயராக்கியபோதே இந்த அதிருப்தி வெளிப்பட்டதாக சொல்கிறார்கள்..
மதுரை மாநகராட்சி: இதனால், மாநகராட்சி நிர்வாகத்திலும் அவர்கள் யாரும் தலையிடாமலேயே இருந்து வந்ததால், மாநகர திமுக நிர்வாகிகளுக்கும், பிடிஆர் தரப்புக்கும் இடையே அதிருப்திகள் வெடித்ததாக தெரிகிறது.. அதிலும், சமீபத்தில் நடந்து முடிந்த மதுரை மாநகர திமுக மாவட்டச் செயலாளர் தேர்தலில் இந்த அதிருப்தி வெளிப்படையாகவே தென்பட்டது... எனவே, மதுரை மாவட்ட திமுகவில் ஏற்பட்ட விவகாரங்கள்தான் பிடிஆர் பதவி மாற்றத்துக்கு காரணம் இன்னொரு தரப்பினர் சொல்கிறார்கள்.
அதேபோல, துறை ரீதியான திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதிலும், மூத்த அமைச்சர்களுடன் முரண்பாடு இருந்ததாக சொல்கிறார்கள்.. நிதி சிக்கனம் என்ற காரணத்தை பிடிஆர் தரப்பில் சொன்னாலும், சில சீனியர்கள் அதை ஏற்கவில்லை என்பதால், சம்பந்தப்பட்ட சில அமைச்சர்களே அப்செட் ஆனதாக சொல்கிறார்கள்.. போதாக்குறைக்கு, ஆடியோ விவகாரம், அரசு ஊழியர்கள் சங்கங்களுடன் நீடித்த பிரச்சினை போன்றவைகளும் இணைந்து கொண்டதுதான் பிடிஆர் பதவி மாற்றப்பட்டதாக மற்றொரு தரப்பினர் சொல்கிறார்கள்.

தங்கம் தென்னரசு: இன்னும் 3 ஆண்டுகள் ஆட்சியை தொடர இணக்கமான சூழ்நிலை வேண்டும் என்பதற்காகவே பிடிஆரிடம் இருந்த நிதி இலாகாவை தங்கம் தென்னரசுவிடம் ஒப்படைக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.. இரண்டு பெரிய துறைகளை சமாளிப்பது கடினம் என்பதால் அவரிடம் இருந்த தொழில்துறை டிஆர்பி ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்..
சீனாவில் இருந்து தொழில் நிறுவனங்கள் வெளியேறி வரும் நிலையில் அவர்கள் பார்வை இந்தியா மீது திரும்பி இருக்கிறது.. குறிப்பாக அவர்கள் தமிழகத்தை விரும்புகிறார்கள். இதனால் முதலீடுகள் அதிக அளவில் குவிகின்றன.. டிஆர்பி ராஜா இளையவர் என்பதுடன், அவரது 'நட்பு' வட்டாரமும் பெரியது. எனவே, கூடுதலான கவனமும் செலுத்த முடியும் என்று அந்த வட்டாரம் கேட்டுக்கொண்டதாலேயே, அவரிடம் இந்த இலாகா கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.
யூகங்கள் : இப்படி யூகமான காரணங்கள் வெவ்வேறு சொல்லப்பட்டாலும், தகவல் தொழில்நுட்ப துறை வழங்கப்பட்டிருப்பதால், திமுகவில் அவரின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் திமுக தரப்பில் இருந்தே சிலர் எழுப்பி கொண்டிருக்கிறார்கள்.. ஆக, கட்சி ரீதியாகவும்சரி, துறை ரீதியாகவும் சரி, பிடிஆருக்கான முக்கியத்துவம் குறைந்தே இருப்பதாகவும், திறமையான நிதியமைச்சரை திமுக இழந்திருக்கக்கூடாது என்றும் பொருமல்கள் வெடித்தபடியே உள்ளன.. பிடிஆருக்கான ஆதரவுகளும் சோஷியல் மீடியாவில் எழுந்தபடியே உள்ளன..!!
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications