நெசவாளர்களுக்கு திமுக அரசு செய்தது என்ன? சொல்லிக்கொண்டே போகலாம் என நீண்ட லிஸ்ட் போட்ட முதல்வர்!
நெசவாளர்களுக்கு திமுக அரசு செய்தது என்ன? என்பதை லிஸ்ட் போட்ட முதல்வர் ஸ்டாலின்.
சென்னை: திமுக ஆட்சியில் இருந்த பொழுதெல்லாம் நெசவாளர்களுக்கு என்னென்ன திட்டங்கள், சாதனைகள் செய்யப்பட்டுள்ளது என்பதை நீண்ட லிஸ்ட் போட்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
கோவையில் தனக்கு விசைத்தறி நெசவாளர்கள் நடத்திய பாராட்டு விழாவில் அதை பெருமையுடன் பேசிய அவர், சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம் எனக் கூறி முடித்தார்.
நெசவாளர்களுக்கு திமுக ஆட்சிக்காலங்களில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் பற்றி முதல்வர் கூறிய விவரம் வருமாறு;

* காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு சரிகை நிறுவனம் 1971ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
* ஈரோட்டில் தமிழ்நாடு கூட்டுறவு பதனிடும் ஆலை 1973-இல் துவக்கப்பட்டது.
* கூட்டுறவு கைத்தறி நெசவாளர்களுக்கான சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் 1975 முதல் செயல்படுத்தப்பட்டது.
* நெசவாளர் முதியோர் ஓய்வூதியத் திட்டம் முதன்முதலாக 1997 ஆம் ஆண்டுதான் தொடங்கப்பட்டது. மாதந்தோறும் ஓய்வூதியமாக 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. 26,433 நெசவாளர்கள் இதனைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். 20 விழுக்காடு தள்ளுபடி 1998 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
* உழவர்களுக்கு இருப்பதைப் போல கைத்தறி நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் 2006-ஆம் ஆண்டு கழக அரசால் கொண்டுவரப்பட்டது.
* நெசவாளர்கள் "ஹட்கோ" நிறுவனத்திடம் பெற்ற வீட்டுக் கடன் தொகை அனைத்தையும் 2008 ஆம் ஆண்டில் கழக அரசு தள்ளுபடி செய்தது.
* துணிநூல் துறைக்காகத் தனியாக ஆணையரகம் உருவாக்கப்பட்டுள்ளது.
* கடந்த 10 ஆண்டுகளாகச் செயல்படாமல் இருந்த, காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டுப் பூங்கா புத்துயிர் பெற்றுள்ளது.
* நெசவாளர் குறை தீர்க்கும் மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
* நெசவாளர் முத்ரா திட்டத்தின்கீழ் 24 ஆயிரத்து 684 பயனாளிகளுக்கு 120 கோடியே 80 லட்சம் ரூபாய் முத்ரா கடன்கள் வங்கிகளால் வழங்கப்பட்டுள்ளது.
* தஞ்சாவூர், கரூர், விருதுநகர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள சுமார் 10 ஆயிரம் கைத்தறி நெசவாளர்கள் பயனடையும் வகையில், ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் நெசவுக் கூடம், பொது வசதி மையம், சாயச்சாலைகள் திறந்து வைக்கப்பட்டது.
* 10 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று பணிபுரிந்து வந்த 406 தற்காலிக பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
* முதன்முறையாக எப்போதும் இல்லாத வகையில், அடிப்படைக் கூலியில் 10 விழுக்காடும், அகவிலைப்படியில் 10 விழுக்காடும் உயர்த்தி வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் ஒரு இலட்சம் நெசவாளர்கள் பயனடைந்திருக்கிறார்கள்.

* நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து வரும் 1033 நிரந்தரப் பணியாளர்களுக்கு 15 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
* சிறந்த நெசவாளர் விருதுகள், சிறந்த ஏற்றுமதியாளர் விருதுகள் மற்றும் சிறந்த வடிவமைப்பாளர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
* கைத்தறி ஆதரவுத் திட்டத்தின்கீழ் 12 ஆயிரத்து 866 கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட ரூபாய் 60 கோடி செலவில் தறி உபகரணங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
* 757 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் பெறும் காசுக்கடன் மீதான வட்டிச்சுமையை குறைக்கும் வகையில் ரூபாய் 25 கோடி வட்டி மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது.
* சென்னையில் முதன்முறையாக ரூபாய் 30 கோடி மதிப்பில் உலகத் தரத்தில் International Standard Design and Incubation Centre (DICC) அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்யப்படுகிறது.
* சென்னைக்கு அருகே மாமல்லபுரத்தில் கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் காட்சியகம் (Handlooms and Handicrafts Museum) அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
* தமிழ்நாட்டின் கைத்தறி இரகங்களை அடுத்த தலைமுறையினருக்கு (Next Generation) கொண்டு செல்லும் வகையில் மின்னாக்கம் செய்து, ஆவணப்படுத்தும் பணிகள் ரூபாய் ஒரு கோடி செலவில் நடைபெற்று வருகிறது.
* ஈரோட்டிலுள்ள தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலையிலுள்ள தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
* 5,000 விசைத்தறிகளின் உற்பத்தி மற்றும் தரத்தினை மேம்படுத்த, ரூபாய் 12 கோடி செலவில் Electronic Panel Board நிறுவப்பட்டு வருகிறது.
* வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின்கீழ், 50 ஆயிரம் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.
1 கோடியே 78 லட்சம் சேலைகளும், 1 கோடியே 77 லட்சம் வேட்டிகளும் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் நடைபெற்று வருகிறது.
* வேட்டி சேலை திட்டம் மற்றும் சீருடை வழங்கும் திட்டங்களில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு, நெசவுக்கு முந்தைய பணிகளுக்கான கூலி 10 விழுக்காடு முதல் 30 விழுக்காடு வரை ரூபாய் 4 கோடியே 40 லட்சம் அளவிற்கு உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
* பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் திட்டத்தின்கீழ், 42 இலட்சம் மாணவ, மாணவியர்களுக்கு சீருடைத் துணிகள் நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்து வழங்கப்பட்டுள்ளது.
* கைத்தறி நெசவாளர்களுக்கு வீடுகள் கட்ட மானியமாக வழங்கப்படும் தொகை ரூபாய் 4 இலட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நெசவாளர் யாரும் கோரிக்கை வைக்காமலேயே ஏராளமான திட்டங்களை நிறைவேற்றித் தந்திருக்கிறோம்.இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.












Click it and Unblock the Notifications