EXCLUSIVE: அமித்ஷா பேசியது சரி.. ஆனால், முகலாயரை ஒப்பிடுவதன் நோக்கம் வேறு? -எழுத்தாளர் மன்னர் மன்னன்
சென்னை: பாண்டியர்கள், சோழர்கள் குறித்த வரலாறுகள் முழுமையாக இல்லை என்று அமித்ஷா சொன்னது உண்மைதான் என்றும், ஆனால், முகலாய மன்னர்களை ஒப்பிடுவதன் உள்நோக்கம் என்ன எனவும் வரலாற்று எழுத்தாளர் மன்னர் மன்னன் கேள்வி எழுப்பியுள்ளார். அமித்ஷாவின் கருத்து தொடர்பாக வரலாற்று எழுத்தாளர் மன்னர் மன்னனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு அவரளித்த பதில்களை பார்க்கலாம்.
கேள்வி: தமிழில் தொன்மையான இலக்கியங்கள் உள்ள நிலையில், சோழர் பாண்டியர் வரலாறு பதிவு செய்யப்படவில்லை என்று அமித்ஷா சொல்வது சரிதானா?

இதை 2 விசயமாக பார்க்க வேண்டும். அமித்ஷா சொன்ன செய்தி உண்மை. அதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அவர் அந்த பிரச்சனை யைதீர்ப்பதற்காக பேசுகிறாரா? அல்லது அதை பயன்படுத்திக் கொள்வதற்காக பேசுகிறாரா? என்பதை பார்க்க வேண்டும். சோழர்கள், பாண்டியர்கள் வரலாறு முழுமையாக பதிவு செய்யப்படவில்லை என்றுதான் நானும் கூறி வருகிறேன். பல்லவர் வரலாறு என்ற புத்தகத்தை நான் சமீபத்தில் எழுதி இருந்தேன். அந்த புத்தகத்தில் நாம் புதிய தகவல்களை கொடுத்து இருக்கிறோம். இதுபோன்ற புத்தகம் வருகிறது என்றால் அதை பாடநூல்களில் மாற்ற வேண்டும். வெளிநாடுகளில் அதுதான் நடக்கிறது. நமது தமிழ்நாடு பாடநூல்களில் அது மாறுவதற்கு 10 முதல் 20 ஆண்டுகள் ஆகின்றன. ஏனென்றால் அதற்கு நம்மிடம் முறையான குழு இல்லை.
சோழர்கள் வரலாற்றை பொறுத்தவரை அவர்கள் பேரரசர்கள் என்ற தகுதிக்கு உரியவர்கள். ஆனால் அவர்களை பற்றிய முறையான வரலாற்று தகவலோ புரிதலோ இல்லை. நமது பாடபுத்தகத்தில், சோழர் காலத்தில் சாதி, தீண்டாமை இருந்ததாக உள்ளது. ஆனால், அது வரலாற்றின் அடிப்படையில் தவறு. ஒரு ஆதாரம் கூட இல்லாமல் சொல்லப்பட்டது. பாடபுத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கருத்தும் ஆய்வின் அடிப்படையில் இருக்க வேண்டும். பாடத்திட்டத்தை தயாரிப்பவர் சொந்த கருத்தை எழுத அனுமதிக்கக்கூடாது. அவர் ஆர்.எஸ்.எஸ்.காரராக இருந்தாலும், திராவிட இயக்கத்தை சேர்ந்தவராக இருந்தாலும், தமிழ் தேசியவாதியாக இருந்தாலும் சரி.

கேள்வி: முகலாய வரலாறுகளை அதிகம் எழுதுகிறார்கள், சோழர், பாண்டியர்கள் போன்ற இந்திய மன்னர்களின் வரலாறுகள் அதிகம் இல்லை என்ற அமித்ஷாவின் கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
இந்திய வரலாற்றை எழுத குழு ஒன்றை நியமித்தார்கள். அந்த குழுவில் தென்னிந்தியாவை சேர்ந்த ஒருவர் கூட இல்லை. இவர்கள் முகலாயர்கள், இஸ்லாமியர்களை எதிராக காட்ட ஆதரவு கேட்கிறார்களே தவிர நம் மீதான அக்கறையில் இதை சொல்கிறார்களா என்று பார்க்க முடியவில்லை. உண்மையாகவே அக்கறை இருந்திருந்தால் இவர்கள்தானே இதை முதலில் தொடங்கி இருக்க வேண்டும். இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து தொடங்கப்பட வேண்டும் என்று உலக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். வட இந்தியாவில் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கற்கால பொருட்கள் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த கற்கால பொருட்கள் கிடைக்கின்றன. எழுத்து அடிப்படையில் பார்த்தாலும் தமிழி கி.மீ 6 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. சமஸ்கிருத எழுத்துக்கள் கி.பி. 2 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. இரும்பு கலாச்சாரத்தை எடுத்துக்கொண்டாலும் கி.மு. 1300 க்கு முன் அதை வட இந்தியாவில் பார்க்க முடியவில்லை. அதுவும் தென்னிந்தியாவிலிருந்து சென்றதாகவே சொல்லப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் கி.மூ.2,200ல் இரும்பு கலாச்சாரம் இருந்ததை நிரூபித்து இருக்கிறார்கள்.
இதே அரசாங்கம் கீழடியில் 3 ஆம் கட்ட அகழாய்வு நடைபெற்றபோது மத்திய அரசின் தொல்லியல்துறை போதுமான சான்றுகள் கிடைக்காததால் குழியை மூட சொன்னார்கள். 4 வது அகழாய்வில்தான் தமிழி கி.மு. 600 ஐ சேர்ந்தது என்ற ஆதாரம் கிடைத்தது. எங்கு மூட சொன்னார்களோ அங்கு தோண்டியபோது கிடைத்த ஆதாரங்கள்தான் இவை. இவர்கள் நமது ஆய்வை ஊக்குவிக்கவில்லை. கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க நிதி கேட்டபோது இல்லை என்று சொல்லிவிட்டு ராமாயண அருங்காட்சியகம் அமைக்க ரூ.1,000 கோடி ஒதுக்கினார்கள்.
நமது பொருநை நாகரீகத்தை பற்றி ஆய்வு செய்ய நிதி ஒதுக்காமல், காணாமல்போன சரஸ்வதி ஆற்றை கண்டறிய நிதியமைச்சர் பட்ஜெட்டிலேயே ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கினார். நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு பேச்சு சிந்து சமவெளி நாகரீகத்தை சரஸ்வதி சிந்து நாகரீகம் என்று குறிப்பிடுகிறார். சிந்து சமவெளியில் ஆரியர் சம்பந்தப்பட்ட ஒரு தடம் கூட இல்லை. ஆனால், அதை ஆரிய நாகரீகமாக கட்டமைக்கும் முயற்சியில் இந்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இப்படி தமிழர் வரலாற்றுக்கு எதிராகவும் இல்லாத வரலாற்றை கட்டமைக்கவும், ஆரியர் பூர்வக்குடிகள் என்பதை நிருவவும் முயற்சிக்கிறார்கள். 1975 ல் உள்ள பாடபுத்தகங்களில் ஆரியர் படையெடுப்பு என்று இருந்தது. பின்னர் ஆரியர் வருகை என்று மாற்றினார். இப்போது, ஆரியர்கள் வரவே இல்லை, அவர்கள் இந்த மண்ணை சேர்ந்தவர்கள், ஆய்வுகள் அனைத்தும் பொய் என்கிறார்கள்.
இங்கு வந்து ஆய்வு செய்யக்கூடிய சர்வதேச ஆய்வு நிறுவனங்களையும் மிரட்டுகிறார்கள். முதன்முதலில் ஆங்கிலேயர்கள் அகழாய்வு செய்த இடம் தமிழ்நாடு. சுதந்திரம் அடைந்த 50 ஆண்டுகள் வரை மத்திய அரசு தமிழ்நாட்டில் எந்த அகழாய்வையும் நடத்தவில்லை. தமிழக வரலாற்றை அழிப்பதற்கு எவ்வளவு முயற்சி செய்ய வேண்டுமோ அதை கடந்த ஆண்டுகளில் இந்திய அரசாங்கம் செய்திருக்கிறது. தற்போது திடீரென சோழர் வரலாறு இல்லை என்று சொன்னால், அதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?

கேள்வி: இதற்கு முன் நடிகர் அக்ஷய் குமார் சாம்ராட் பிருத்விராஜ் என்ற படம் குறித்த நிகழ்ச்சியில் பாலிவுட் திரைப்படங்களில் முகலாயர் வரலாறு மட்டுமே இருப்பதாகவும் இந்திய வரலாறுகள் அதிகம் இல்லை என்றும் பேசினார். அமித்ஷாவும் அந்த படத்தை பார்த்தார். தற்போது அதே கருத்து சொல்லி இருப்பதை எப்படி எடுத்துக்கொள்வது?
அந்த படமே தவறான படம். பிருத்விராஜ் சவுகான் முஹம்மது கோரிரியை கொல்வதைபோன்ற காட்சி உள்ளது. முஹம்மது கோரிக்கு முன்பாகவே பிருத்விராஜ் சவுகான் இறந்துவிட்டார். அந்த டைம்லைனையே வெளியிட்டு இருக்கிறார்கள். வரலாற்றை வரலாறாகதான் படமாகவோ எழுதவோ முடியும். புனிதப்படுத்துவது தவறு. அது அபாயகரமானது. ஆங்கில படங்கள் வரலாறு இல்லை என்ற புரிதலோடுதான் மக்கள் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் திரைப்படத்தில் வருவதைதான் வரலாறு என்ற நம்புகிறார்கள். படம் எடுப்பவர்களாவது, கற்பனை கதை என்று சொல்ல வேண்டும். குறிப்பிட்ட நபர் மீதான பற்றாலோ வெறுப்பாலோ அதை எழுதக்கூடாது.
அமித்ஷா பேசியதிலும் தவறு உள்ளது. பாண்டியர் மன்னர்கள் 800 ஆண்டுகள் ஆட்சி செய்ததாக பேசியுள்ளார். ஆனால், பாண்டிய மன்னர்களுக்கு உள்ள சிறப்பே அவர்கள் 2,000 ஆம் ஆண்டுகள் ஆட்சி செய்ததுதான். உலகிலேயே மிக அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த அரசு பரம்பரையை சேர்ந்தவர்கள் பாண்டியர்கள்தான். வட இந்தியாவில் இது ஒரு புத்தகத்திலும் இல்லை. இருந்தால் அமித்ஷா சொல்லி இருக்க மாட்டாரா? சேர, சோழ, பாண்டியர்களின் வரலாறுகள் முழுமையாக எழுதப்படவில்லை என்பது 100 சதவீதம் உண்மை. ஆனால் நாங்கள் ஒப்பிட்டு சொல்லவில்லை. தமிழ்நாட்டில் வரலாற்று ஆய்வாளர்கள் ஒருபோதும் இஸ்லாமிய மன்னர்களை பற்றி எழுதுகிறீர்களே? இவர்களை பற்றி ஏன் எழுதவில்லையே? என்று ஒப்பிட்டது கிடையாது. எங்கள் குற்றச்சாட்டுக்கும் அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.

கேள்வி: வரலாறுகளை அரசு தரப்பில் வெளியிட்டால் சர்ச்சைகள் பல எழும். வரலாற்று அறிஞர்கள்தான் இதை செய்ய வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்து சரிதானா?
அரசாங்கம் வரலாற்று ஆய்வாளர்கள் குழுவை அமைக்கலாம் அல்லது முறையாக வரலாற்று ஆய்வு செய்பவர்களுக்கு வெளிநாடுகளைபோல் நிதியுதவியோ ஊதியமோ கொடுக்கலாம். அமர்தியா சென் அதுபோல்தான் நிறைய புத்தகங்களை எழுதினார். இங்கு அரசு அதிகாரிகள்தான் அதை எழுதுகிறார்கள். அவர்கள் கள ஆய்வும் செய்ய மாட்டார்கள். கெடுவும் அவர்கள் விதிக்கப்படாது. அந்த குழுவும் எப்படி செயல்படும் என்றும் சொல்ல முடியாது. இந்தியாவில் 80% வரலாற்று ஆய்வுகள் தனிநபர்கள் கொண்டு வந்ததுதான். 1945 வரை ஆகழாய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர்கள் பகுதி நேரமாக சொந்த பணத்தை செலவழித்து எழுதியதுதான் இந்திய வரலாறு. வரலாற்று ஆசிரியர்கள், அகழாய்வு செய்பவர்களுக்கு பெரிய அளவில் பணம் செலவாகும். ஆனால், எங்களுக்கென்று ஒரு விருது கூட இல்லை. நோபல் பரிசில் வரலாற்றுக்கு விருது கிடையாது. சாகித்திய அகாடமியிலும் வரலாற்றுக்கு விருது கிடையாது. கதை எழுதுபவர்களுக்கு இருக்கும் சுதந்திரமும் இல்லை. வரலாற்றை எழுதுபவர்களுக்கு சமூகத்தில் உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை.

வரலாற்று ஆய்வாளர்கள் போதுமான அதிகாரத்தோடும் பொருளாதாரத்துடனும் இருப்பதில்லை. ஆனால், அரசுக்கு சாதகமாக இருக்கும் தொல்லியல், வரலாற்று ஆய்வாளர்களுக்கு பணம், பதவி எல்லாம் கிடைக்கிறது. கே.கே.முஹம்மது என்ற ஆய்வாளர் பாபர் மசூதிக்கு கீழ் கோயிலின் எச்சம் என்று சொன்னதால்தான் அந்த வழக்கின் நிலையே மாறியது. ஆனால், அதை பவுத்த விகாரத்தின் எச்சம் என்று சொல்லி இருக்க வேண்டும். அதை சொல்லவில்லை. அவருக்கு மத்திய அரசு எல்லா உதவிகளையும் செய்தது. இப்படி வரலாற்று ஆய்வாளர்கள் விலைபோவதும் அதிகமாக நடக்கிறது. தமிழ்நாடு அரசுக்கு நாணயவியல் என்ற துறையே கிடையாது. தனியாரிடம் கேட்டுதான் செய்கிறார்கள். இத்தனைக்கும் தொல்லியல்துறை அமைச்சர் ஒரு நாணய சேகரிப்பாளர். சில ஆய்வுகள் அரசு உதவியுடன் நன்றாக வந்துள்ளது. அது எழுதக்கூடியவரின் மனசாட்சியை பொருத்தது." என்றார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications