ஒப்புதல் அளிக்க மறுத்த ஆளுநர்.. சட்டசபையில் மீண்டும் நிறைவேறிய 10 மசோதாக்கள்.. லிஸ்ட் இதோ
சென்னை: தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியதாக கூறப்படும் 10 மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் ஆளுநரிடம் நிலுவையில் உள்ள 10 மசோதாக்கள் குறித்த விபரம் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் ஆளுநர் ஒப்புதலுடன் சட்டமாக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழக சட்டசபையில் நிறைவேறும் மசோதாக்கள் ஆளுநர் ஆர்என் ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் ஆளுநர் ஆர்என் ரவி பல மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைப்பதாக தமிழக அரசு சார்பில் குற்றம்சாட்டப்படுகிறது. ஆன்லைன் ரம்மி தடை மசோதா, நீட் விலக்கு மசோதா உள்ளிட்டவை முதல் பல மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளிக்க மறுத்து திருப்பி அனுப்பினார்.
இதையடுத்து இந்த 2 மசோதாக்களை மீண்டும் சட்டசபையில் தமிழக அரசு நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆளுநரை பொறுத்தமட்டில் 2வது முறையாக ஒரு மசோதா வந்தால் அதற்கு ஒப்புதல் வழங்க வேண்டியது கட்டாயமாகும். அப்படித்தான் ஆன்லைன் ரம்மி தடை மசோதா நிறைவேறிய நிலையில் நீட் விலக்கு மசோதா ஆளுநர் ஆர்என் ரவி மூலம் ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் இன்று தமிழகத்தில் சிறப்பு சட்டசபை கூட்டம் நடைபெற்றது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் காலை 10 மணிக்கு இந்த சட்டசபை கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஆளுநர் ஆர்என் ரவி நீண்டகாலமாக ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானத்தின் மீது சட்டசபை உறுப்பினர்கள் தங்களின் கருத்துகளை முன்வைத்தனர். அதன்பிறகு இறுதியாக 10 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. ஆளுநரை பொறுத்தமட்டில் மசோதாவை ஒரு முறை மட்டுமே திருப்பி அனுப்ப முடியும் என்பதால் இந்த 10 மசோதாவுக்கும் ஒப்புதல் கையெழுத்து போடும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தான் இன்றைய சட்டசபை கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களின் விபரம் வருமாறு: 2020 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக திருத்த சட்ட முன்வடிவு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக திருத்த சட்ட முன்வடிவு, 2022ல் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டம் திருத்த சட்ட முன்வடிவு, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த சட்ட முன்வடிவு, சென்னை திருத்த சட்ட முடிவு, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக திருத்த சட்ட முன்வடிவு, தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டங்கள் 2ம் திருத்த சட்ட முன்வடிவு, தமிழ் பல்கலைக்கழக 2 ஆம் திருத்த சட்ட முன்வடிவு உள்ளிட்டவை அடங்கும்.
இதுதவிர 2023ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக திருத்த சட்ட முன்வடிவு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக திருத்த சட்ட முன்வடிவு உள்ளிட்டவை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 143ன் கீழ் மறுஆய்வு செய்வதற்கு சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்து அது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
*******
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications