வந்து கொட்டிய அறிவிப்புகள்.. ஸ்டாலின் சொன்ன 13 நல்ல செய்தி.. தமிழ்நாடு வேற லெவலில் மாறப்போகுதே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களை மேற்கொண்டு உள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொண்டு இன்று காலை தமிழ்நாட்டிற்கு திரும்பினார். சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளில் முக்கியமான ஆலோசனை கூட்டங்களை அவர் நடத்தினார்.

What are the 13 agreements signed by Tamil Nadu CM Stalin in Singapore and Japan?

ஜனவரி 2024-இல் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்க அவர் இந்த பயணத்தை மேற்கொண்டார். தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் கொண்டு வரவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும் கொண்டு வரவும் இந்த பயணம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு ஜன. 10 மற்றும் 11ம் தேதிகளில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. இதற்கு அழைப்பு விடுப்பதற்காக அவர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். பல்வேறு முக்கிய நிறுவனங்களை சந்தித்து இதற்காக ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். முதலீடுகளை ஈர்க்கவும், முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கவும் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார். சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளில் அவர் முக்கிய சந்திப்புகளை நடத்தினார்.

ஒப்பந்தங்கள்: ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் பயணத்தில் 13 முக்கியமான ஒப்பந்தங்களை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டார்.

முதல்வரின் ஜப்பான் பயணத்தின் போது ₹947 கோடி முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஜப்பானிய நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் டிரெய்லர்கள் மற்றும் டிரக்குகள் உற்பத்தி தொழிற்சாலைக்கு சாட்ராக் ₹113.90 கோடி முதலீடு செய்கிறது.

திருவள்ளூரில் மருத்துவ சாதனங்கள் எம்எஃப்ஜி ஆலைக்கு ஓம்ரான் நிறுவனம் ₹128 கோடி முதலீடு செய்கிறது.

பாலிகார்பனேட் தாள்களுக்காக ₹200 கோடியை Kohyei என்ற நிறுவனம் சென்னையில் முதலீடு செய்கிறது.

Sato-Shoji Metal's HQ Steel நிறுவனம் பல்வேறு உதிரிபாகங்களுக்காக ₹200 கோடி முதலீடு செய்கிறது.மிட்சுபா
நிறுவனம் கும்மிடிப்பூண்டியில் ஆலை விரிவாக்கத்திற்காக ₹155 கோடி முதலீடு செய்கிறது.

Tofle SS Flexible நிறுவனம் ஹோஸ் பைப்புகளுக்காக ₹150 கோடி முதலீடு செய்கிறது.
கட்டுமானத் துறையில் Shimizu கார்ப் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

இன்னொரு பக்கம் சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அலுவலகம் (Singapore India Partnership office - SIPO) மற்றும் தமிழ்நாட்டின் Fame TN மற்றும் TANSIM நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

அதேபோல் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த Singapore Indian Chamber of Commerce and Industries (SICCI) நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அலுவலகம் (Singapore India Partnership office - SIPO) மற்றும் தமிழ்நாடு அரசின் சிப்காட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த மின்னணு பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான Hi-P International Pvt. Ltd., நிறுவனத்திற்கும் இடையே ரூ. 312 கோடி முதலீடு மற்றும் 700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், Singapore University of Technology & Design (SUTD) நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கும் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த ITE Education Services நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+