லோக்சபா 2024 தேர்தலில்.. பாஜகவிற்கு ரொம்ப கஷ்டம்.. தாக்க போகும் 6 அம்புகள்.. காவிக்கு சிக்கலாமே!
சென்னை: லோக்சபா தேர்தல் குறித்து பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில் பாஜகவிற்கு 6 விஷயங்கள் வரும் லோக்சபா தேர்தலில் எதிராக திரும்பும் என்று அரசியல் வல்லுனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
2024 லோக்சபா தேர்தல் குறித்து பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. இதில் சில கருத்து கணிப்புகள் பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்காது என்றும் சில கருத்து கணிப்புகள் பாஜகவிற்கு கண்டிப்பாக மிகப்பெரிய மெஜாரிட்டி கிடைக்கும் என்றும் தெரிவிக்கின்றன.

உதாரணமாக டைம்ஸ் நவ் இடிஜி சார்பில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு நடத்தப்பட்டு சமீபத்தில் ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடிக்கும் எனவும், 26 கட்சிகளின் ‛‛இந்தியா'' கூட்டணி பின்னடைவை சந்திக்கும் எனவும் கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணி 296 முதல் 326 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

26 கட்சிகள் இணைந்த எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணி 160 முதல் 190 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் தமிழ்நாட்டில் 4-8 இடங்களை பாஜக - அதிமுக கூட்டணி லோக்சபா தேர்தலில் பிடிக்கும் என்று இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இன்னொரு பக்கம் PCSurveysIndia அதாவது Political Critic என்ற அமைப்பு இன்னொரு கருத்து கணிப்பை வெளியிட்டு உள்ளது. அதில், பாஜகவின் என்டிஏ கூட்டணி : 255 இடங்கள் எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி: 225 இடங்கள் மற்ற கட்சிகள் : 63 இடங்கள் வெல்லும் என்று இந்த அமைப்பு கணிப்பு வெளியிட்டு உள்ளது

மாநில வாரியாக லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் 38 இடங்களை திமுக காங்கிரசின் இந்திய கூட்டணி வெல்லும் என்றும், அதிமுக - பாஜக கூட்டணி ஒரே ஒரு இடத்தில் வெல்லும் என்றும் இந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
6 விஷயங்கள்: இப்படி லோக்சபா தேர்தல் குறித்து பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில் பாஜகவிற்கு 6 விஷயங்கள் வரும் லோக்சபா தேர்தலில் எதிராக திரும்பும் என்று அரசியல் வல்லுனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பார்த்தா டாஸ் என்ற பிரபல அரசியல் வல்லுனர் செய்துள்ள போஸ்டில், பாஜக 2019 ஆம் ஆண்டை போல மீண்டும் இந்தி மொழி பேசும் மாநிலங்களில் வெல்ல முடியுமா?வாக்கு பங்கின் அடிப்படையில் வடக்கில் பாஜக மீண்டும் வெல்ல முடியுமா? என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை என்பதுதான். ஏனென்றால்

1. சீக்கிய சமூகத்தினர் வாக்களிக்க மாட்டார்கள்
2. SC & ST சமூகத்தினர் 2019 இல் செய்தது போல் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க மாட்டார்கள்
3. விவசாயத்தை நம்பி வாழ்வாதாரம் கொண்ட விவசாயிகள் 2019ல் செய்தது போல் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வாய்ப்பில்லை.
4. மோடி ஜி/பாஜக மீது இளைஞர்கள் சிறிது அதிருப்தி அடைந்துள்ளனர்
5. NRC+CAA பிரச்சினை இல்லாத காரணத்தால் 2024 இல் மத பிளவு குறைவாக உள்ளது
6. பாலகோட் தாக்குதல் போன்ற உணர்ச்சிக் காரணி இந்த தேர்தலில் காணவில்லை என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்த 6 விஷயங்கள் பாஜகவிற்கு எதிராக திரும்பலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் பாஜகவின் வெற்றி இந்த முறை அவ்வளவு எளிதல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக்












Click it and Unblock the Notifications