"ஆக்‌ஷன்".. அதிகாரிகளுக்கு பறந்த ஆர்டர்.. தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் அதிரடி.. கோட்டையில் என்னாச்சு

அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தலைமை செயலாளர் இறையன்பு அட்வைஸ் தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மழை வெள்ள காலத்தில், பொதுமக்களை நிவாரண மையங்களில் தங்க வைப்பதற்காக, நிவாரண மையங்களை எப்போதும் தயார் நிலையில் வைக்க வேண்டும்... வெள்ளக்காலங்களில் பாதிக்கப்படும் எல்லாருக்கும் உணவு தங்குதடையின்றி வழங்க அத்தியாவசியப் பொருட்களை இருப்பு வைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.. வடகிழக்குப் பருவமழை காலத்தில், பேரிடர்களின் சவால்களை திறம்பட எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் இறையன்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதம் தொடங்க உள்ள நிலையில் அதுதொடர்பான ஆயத்தப் பணிகள், முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது..

அந்தவகையில், தலைமைச் செயலர் வெ.இறையன்பு தலைமையில், தலைமைச் செயலகத்தில் துறை அதிகாரிகளுடனான இதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.

 இறையன்பு

இறையன்பு

இதில், அரசுத் துறைகளின் செயலர்கள், துறை தலைவர்கள், ராணுவம், விமானப்படை, கப்பற்படை, கடலோர காவல்படை, இந்திய வானிலை ஆய்வு மையம், ஒன்றிய நீர்வள ஆணையம், தேசிய பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.. அப்போது, தலைமைச் செயலர் வெ.இறையன்பு மிக முக்கியமான விஷயங்களை முன்னிறுத்தி, அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். இறையன்பு பேசியதன் சுருக்கம் இதுதான்:

 வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை

"பேரிடர் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் சமீபகாலங்களில் ஆறுகளில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன. பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளின் எண்ணிக்கையும் பெருமளவு குறைந்துள்ளது... அதனால், நீர்வள ஆதாரத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சிநிர்வாகம் ஆகிய துறைகள் மழைநீரை சேமித்து வைக்க மேற்கொண்டு வரும் திட்டப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். இந்த ஒன்றரை வருடங்களில் பேரிடர் தொடர்பான வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்ள போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால், வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

 வானிலை ஆய்வு மையம்

வானிலை ஆய்வு மையம்

குறைந்த நேரத்தில் ஏற்படும் அதிகபட்ச மழைப் பொழிவு காரணமாக மழைநீர் தேங்குதல் மற்றும் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்தல் போன்ற பேரிடர்கள் ஏற்படுகின்றன... இதைத் தடுக்க வானிலை குறித்த முன்கணிப்பு தகவல்களை இந்திய வானிலை ஆய்வுமையம் முன்கூட்டியே வழங்கும்பட்சத்தில், பொதுமக்கள் தங்கள் பயண திட்டங்களை வரையறுத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும்... இதற்கான தகவல் பரிமாற்ற வசதிகளை சென்னை பெருநகர காவல் ஆணையர், செய்தித்துறை மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆகியவை இணைந்து ஏற்படுத்த வேண்டும்.

 நிவாரண மையம்

நிவாரண மையம்

மேலும், மழை வெள்ள காலத்தில், பொதுமக்களை நிவாரண மையங்களில் தங்க வைப்பதற்காக, நிவாரண மையங்களை எப்போதும் தயார் நிலையில் வைக்க வேண்டும்... வெள்ளக்காலங்களில் பாதிக்கப்படும் எல்லாருக்கும் உணவு தங்குதடையின்றி வழங்க அத்தியாவசியப் பொருட்களை இருப்பு வைக்க வேண்டும்... சாலை சேதங்களை உடனுக்குடன் சரி செய்து போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் தயார் செய்ய வேண்டும். பேரிடர் காலங்களில் மீட்பு நடவடிக்கைகளில் விரைவாக ஈடுபட முப்படையினரும் வீரர்கள், உபகரணங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

 வெள்ள நீர்

வெள்ள நீர்

பாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால்களில் உள்ள அடைப்புகளை அகற்ற வேண்டும்... ஏரி மற்றும் குளங்களின் கரைகளை பலப்படுத்துவதுடன், சமுதாய உணவுகூடங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்... அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் வெள்ளநீரை வெளியேற்றும் பம்பு செட்டுகள் மற்றும் பிற உபகரணங்களின் செயல்பாடுகள், ஏற்கனவே பரிசோதித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்... மழை, வெள்ளக்கால தொற்று நோய்கள் குறித்து சுகாதாரத்துறை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்... அதேபோல புயல் பாதுகாப்பு நிவாரண மையங்கள் மற்றும் கூடுதல் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும்.

அட்வைஸ்

அட்வைஸ்

கண்காணிப்பு அலுவலர்கள் அனைத்து மாவட்டங்கள், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டபங்களில், உடனடியாக ஆய்வு செய்து மழைநீர் வடிகால்கட்டும் பணியை மேற்பார்வையிட்டு விரைவாக முடிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும். எதிர்வரும் வடகிழக்குப் பருவமழை காலத்தில், பேரிடர்களின் சவால்களை திறம்பட எதிர்கொள்ள அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்" என்று இறையன்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+