"விட்றாதீங்க".. கலெக்டர்களுக்கு பறந்த ஆர்டர்.. தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் அதிரடி.. என்னாச்சு
அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தலைமை செயலாளர் இறையன்பு முக்கிய அட்வைஸ் தந்துள்ளார்
சென்னை: மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் இறையன்பு முக்கிய கடிதம் ஒன்றை எழுதி, வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.
அனைத்து அரசு அலுவலகங்களிலும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஓய்வறை அமைக்க தலைமைச் செயலாளர் இறையன்பு கடந்த வருடம் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார்.
அரசு மருத்துவமனைகளிலும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஓய்வறை அமைப்பது அவசியம் என்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறித்தியிருந்த நிலையில், தற்போது அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

கலெக்டர்கள்
அந்த கடிதத்தில், "எழில்மிகு அரசு அலுவலகம்" என்கிற சூழலை உருவாக்க அரசு அலுவலகங்களில் செலவு இல்லாமல் மேற்கொள்ளப்பட வேண்டிய பணியை தெரிவித்து செயல்படுத்த கேட்டுக்கொண்டதற்கிணங்க அனைத்து மாவட்ட கலெக்டர்களும், மிக நேர்த்தியான முறையில் செயல்படுத்தி முந்தைய நிலையையும், தற்போதைய நிலையையும் நிழற்படங்களுடன் கூடிய அறிக்கையை அனுப்பி வைத்ததற்காக பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன்.

ரெஸ்ட் ரூம்கள்
அதே போன்று நாம் அமர்ந்து பணியாற்றும் அரசு அலுவலகங்களையும், உபயோகப்படுத்தும் ஓய்வு அறைகளையும் நாள்தோறும் தூய்மைப்படுத்தி துலங்க செய்யும் தூய்மைப் பணியாளர்கள் அமர்ந்து இளைப்பாறவும், மதிய வேளைகளில் உணவு அருந்தவும், குடிநீர் பருகவும் போதிய வசதிகளைச் செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது.அதன்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களும் தனி கவனம் செலுத்தி தூய்மை பணியாளர்களுக்கு செய்து கொடுத்த வசதிகளை ஆவணப்படுத்தி நிழற்படங்களுடன் கூடிய அறிக்கையை அனுப்பி வைத்துள்ளீர்கள்.

தூய்மை பணியாளர்கள்
இந்த வசதிகளை உங்கள் அலுவலகத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் உங்களது மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனை மற்றும் இதர அரசு துணை அலுவலகங்களில் செயல்படுத்தும் விதமாக, தூய்மைப் பணியாளர்கள் அமர்ந்து இளைப்பாறவும், உணவு அருந்தவும் போதிய வசதிகளை அந்தந்த அரசு அலுவலக தலைமை அலுவலர்கள் மூலம் செய்து கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.

ரிப்போர்ட்
மேலும், இவ்வாறு செய்யப்படும் வசதிகளை ஆவணப்படுத்தி, நிழற்படங்களுடன் அறிக்கை ஒன்று அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் பொதுமக்களுக்கான கழிவறைகள் இல்லாத அரசு அலுவலகங்களில் அதனை உடனடியாக ஏற்படுத்தி 'கழிவறைகள் இல்லாத அரசு அலுவலகங்களே இல்லை' என்ற சூழலை உருவாக்க கேட்டுக்கொள்கிறேன். அத்துடன், இந்த வசதிகளை அரசு அலுவலகங்களில் உடனடியாக ஏற்படுத்தி கொடுத்து ஆவணப்படுத்தி, நிழற்படங்களுடன் கூடிய அறிக்கையை அரசுக்கு விரைந்து சமர்ப்பிக்க வேண்டும்" என்று இறையன்பு கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications