இந்த டாக்குமெண்டுகளை ரெடியா வச்சுக்கோங்க.. அரசு தேடி வரப்போகுது.. கூடுதல் பெண்களுக்கு வருது ரூ.1000
சென்னை: தமிழ்நாட்டில் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் கூடுதல் பெண்களை சேர்ப்பதற்கான ஆவணங்களை அரசு விரைவில் வாங்க உள்ளது. எனவே இங்கே கூறப்பட்டு உள்ள ஆவணங்களை தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
புதிதாக திருமணம் ஆன பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இதற்கான திருமண ஆவணங்களை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும் .

திருமணம் ஆன உடன் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க வேண்டும். குடும்ப தலைவி பெயரில் ரேஷன் கார்டு விண்ணப்பிக்க வேண்டும்.
ஏற்கனவே வீட்டில் பணம் வாங்கிய பெண் இறந்துவிட்ட நிலையில் வீட்டில் உள்ள அடுத்த அதிக வயது கொண்ட பெண் ரேஷனில் மாற்றம் செய்து அதற்கான ஆவணங்களை வைத்து இருக்க வேண்டும்.
வீட்டில் யாரும் அரசு வேலை இல்லை என்பதற்கான சான்றுகள் இருக்க வேண்டும்.
உங்கள் பெயரில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு இருக்க வேண்டும்.
உங்கள் ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கு போன் நம்பர் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
விரிவாக்கப்படும் திட்டம்: மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளனர். இதில் புதிதாக திருமணம் ஆனவர்கள் மற்றும் புது ரேஷன் அட்டைதாரர்கள் ஆகியோர்களுக்கு பணம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன் மூலம் கலைஞர் மகளிர் உரிமை தொகையில் தமிழ்நாட்டில் கூடுதலாக 2.30 லட்சம் பேர் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டது. குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்பதாகும்.
பெரும்பாலும் கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரித்திடவே பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கி, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் இட ஒதுக்கீடு அளித்து பெண் உரிமை போற்றிட, கலைஞர் அவர்களின் பெயரால் இந்த மகளிர் உரிமைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எனவேதான், இந்தத் திட்டத்திற்கு மகளிருக்கான உதவித் தொகை என்று இல்லாமல் 'மகளிர் உரிமைத் தொகை' என்று கவனத்துடன் பெயரிடப்பட்டு உள்ளது.
மகளிர் உரிமை தொகை: கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விரைவில் மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த முறை இதில் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி முன்பு முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கு பணம் கிடைக்கவில்லை. அவர்களுக்கு இந்த முறை பணம் கொடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதேபோல் முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கும் பணம் கொடுக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
எப்போது: இந்த திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகளை சேர்க்க விண்ணப்பங்கள் ஜூன் இரண்டாம் வாரம் வழங்கப்பட உள்ளது. ஜூன் 4ம் தேதி ரிசல்ட் வந்த பின் தேர்தல் விதிகள் தளரும். அதனால் அதற்கு பின்பே விண்ணப்பங்களை கொடுக்க முடியும். அதற்கு பின்பே விண்ணப்பம் கொடுக்கப்படும்.
இந்த திட்டத்தில் கடந்த ஜனவரி கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் இந்த மாதம் இதே திட்டம் மறுவாழ்வு முகாம் பெண்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது,. அதேபோல் இதுவரை விடுபட்ட பெண்களுக்கும் பணம் அனுப்பப்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications