இந்த ஆவணங்களை ரெடியா வச்சு இருங்க! இந்த மாதமே ரூ.1000 வரும்.. மகளிர் உரிமை தொகை முக்கிய அறிவிப்பு
சென்னை: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இந்த மாதம் இதற்கான பணிகள் நடப்பதால் பின்வரும் ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது.
முதலில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் யாருக்கெல்லாம் விரிவு செய்யப்படும் என்று பார்க்கலாம். அதன்படி பின்வரும் மக்களுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

1. முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கு பணம் வழங்கப்படும்.
2, முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கு பணம் வழங்கப்படும்.
3. புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கு பணம் வழங்கப்படும்.
4. புதிதாக திருமணம் ஆன பெண்களுக்கு பணம் வழங்கப்படும்.
ஆவணங்கள் என்னென்ன?:
1. புதிய ரேஷன் அட்டை
2. திருமணம் செய்யப்பட்ட சான்று
3. குடும்ப தலைவி பெயர் உள்ள வங்கி கணக்கு
4. அந்த வங்கி கணக்கு ஆதார் + அந்த பெண்ணின் போன் என்னுடன் இணைக்க வேண்டும்
விரிவாக்கம்: 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டது. குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. அடுத்து, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்பதாகும்.
சமூகத்தில் வெற்றி பெறக்கூடிய ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்று கூறுவதுண்டு. உண்மையில், ஒவ்வொரு நாளும் தன் திறனுக்கேற்ற பணிபுரிந்து, பொருள் ஈட்டும் ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும், அவரது தாய், சகோதரி, மனைவி, மகள் ஆகிய பெண்களின் பல மணிநேர உழைப்பு மறைந்து இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்காகவும், அவரவர் குழந்தைகளின் கல்வி, உடல் நலம் காக்கவும் இந்தச் சமூகத்திற்காகவும், வீட்டிலும், வெளியிலும் ஒரு நாளைக்குப் பல மணி நேரம் பெண்கள் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த உழைப்புக்கு ஊதியம் கணக்கிடப்பட்டிருந்தால், குடும்பச் சொத்துகள் அனைத்திலும் சமமாகப் பெண்கள் பெயரும், சட்டம் இயற்றாமலேயே இடம் பெற்றிருக்கும்.
இப்படி கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரித்திடவே பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கி, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் இட ஒதுக்கீடு அளித்து பெண் உரிமை போற்றிட, கலைஞர் அவர்களின் பெயரால் இந்த மகளிர் உரிமைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எனவேதான், இந்தத் திட்டத்திற்கு மகளிருக்கான உதவித் தொகை என்று இல்லாமல் 'மகளிர் உரிமைத் தொகை' என்று கவனத்துடன் பெயரிடப்பட்டிருக்கிறது
விரிவாக்கம்: தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதாவது மேலும் 1.40 லட்சம் பேருக்கு பணம் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின்படி தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு ரூ. 1000 ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கூடுதல் பெண்களுக்கு பணம் வழங்கப்பட உள்ளது.
எப்படி இணைவது?: தற்போது புதிதாக விண்ணப்பம் செய்யபவர்கள், ஏற்கனவே விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டவர்கள் இதில் இணையலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களின் மனைவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். முன்பு இவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை இருந்தது. கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் விண்ணப்பிக்கலாம். வேறு சில காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பம் செய்யலாம்.
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications