10 ஆண்டுகளில் மீன்களே இருக்காது? வெப்ப அலை பற்றி ஆராய்ச்சியாளர் தரும் எச்சரிக்கை!
சென்னை: வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் வரும் 10 ஆண்டுகளில் மீன் இனங்களே அழிந்துவிடும் அபாயம் இருப்பதாக ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் வீசும் வெப்ப அலைக்கு இந்திய வானிலை மையம் Hot and Humidity weather என்று பெயர் சூட்டி உள்ளது.

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆகவே அந்த 14 மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், திருச்சி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நாமக்கல், அரியலூர், கரூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட 14 மாவட்டங்கள் மஞ்சள் வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் வழங்கப்பட்டிருந்தது. 2 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டிருந்தது. அத்துடன் ஒப்பிடும் போது இன்னும் கோடை வெயில் காலம் உச்சநிலையை அடையவே இல்லை. அதற்கு இந்த மாதிரியான அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வெப்ப அலை தமிழ்நாட்டில் மட்டும் இல்லை. ஏன் இந்தியாவில் மட்டும் இல்லை. ஆசிய நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தும் அளவுக்கு மிகப் பெரிய தாக்குதலாக இந்தப் பிரச்சினை உருவெடுத்துள்ளது.

இதன் தாக்கம் குறித்து பேராசிரியர் ராமச்சந்திரன் சில எச்சரிக்கைகளை வழங்கி உள்ளார். வருங்காலத்தில் என்ன பிரச்சினைகளை உலகம் சந்திக்க உள்ளது என்பது குறித்து விளக்கி உள்ளார்.
ஏன் இந்த வெப்ப அலை? யார் காரணம்?
அது பற்றி ராமச்சந்திரன் பேசுகையில், "இனிமேல் வெயிலின் தாக்கம் அதிகமாகத்தான் இருக்கும். போகப் போகக் கூடுமே தவிர, குறைய வாய்ப்பு இல்லை. அதைப்போலவே மழைக்காலங்களில் மழையின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். திடீர் திடீரென்று மழை அதிகம் பெய்யும்.
கோவையில் தண்ணீர் தட்டுப்பாடு என்கிறார்கள். இந்த ஆண்டு 250 செ.மீட்டர் வரை மழை பெய்திருக்கிறது. ஒரே நாளில் 200 எம்.எம் மழை பெய்தது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மிருகங்கள் எல்லாம் குடிக்க நீர் இல்லாமல் தவிக்கின்றன.
திருநெல்வேலி பக்கம் உள்ள காக்காச்சி மலைப் பகுதியில் ஒரே நாளில் 100 செமீட்டர் மழை பெய்திருந்தது. அது ஒரு ஆண்டுக்கான மழை. ஆனால், இன்று அங்கே தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

ஒரு காலகட்டத்தில் கடும் மழைபொழிவு. அடுத்து கோடைக்காலம் வந்ததும் கடும் வறட்சி. இதுதான் இன்றைய பிரச்சினையாக உள்ளது.
வானிலையானது முற்றிலும் மாறிவிட்டது. அதை மாற்றியவர்கள் நாம்தான். அளவுக்கு அதிகமாக நிலக்கரியை எரிக்கிறோம். அதன் மூலம் மின்சாரம் கிடைக்கிறது. அதைப் பயன்படுத்துகிறோம். கார்பன் டை ஆக்ஸைட் அதிகம் வெளியேறுகிறது. அது குறித்து நாம் கவலைப்படுவதில்லை. அதன் விளைவுகளை இன்றைக்கு அனுபவிக்கின்றோம்.
100 ஆண்டுகள் முன்னால் இருந்த நிலை?:
இயற்கை கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்னால் 274 பிபிஎம் என்கிற அளவுடன் 1 லட்சம் வருடங்களாக இருந்தது. அன்றைக்கு மாலை 7 மணிக்கு எல்லாம் பூமிக்குக் குளிர்ச்சி வந்துவிடும். ஆனால், இன்றைக்கு அப்படி உள்ளதா? இன்றைக்கும் பூமி மீது ஒன்றும் இல்லை.

அளவுக்கு அதிகமாக வெளியேற்றப்பட்ட கார்பன் டை ஆக்சைட் வான மண்டலம் நிறைந்துள்ளது. அன்றைக்கு 274 பிபிஎம் என்று இருந்த அதன் அளவு இன்றைக்கு 421 பிபிஎம் என்ற அளவுக்கு உயர்ந்துவிட்டது.
அன்றைக்கு நாம் வீட்டில் உட்கார்ந்து இருந்தபோது ஃபேன் தேவை இல்லை. இன்றைக்கு ஏசி இல்லாமல் உட்கார முடியவில்லை. இதற்கு எல்லாம் கார்பன் உமிழ்வுதான்.
2030க்குள் 45% நிலக்கரி மற்றும் பெட்ரோல் இல்லாத எரிவாயு பயன்பாட்டுக்குச் செல்வோம் என்று உலகத்திற்கு இந்தியா வாக்குறுதி கொடுத்துள்ளது. 2030க்குள் நாம் அதை அடைந்து விடுவோமா? என்றால் நம்மிடம் பதிலில்லை.
போதாக்குறைக்கு இந்தியா இந்த ஆண்டு நிலக்கரி பயன்பாட்டை 25% அதிகரித்துள்ளது இந்தியா. பிறகு எப்படி கார்பன் அளவைக் குறைக்க முடியும். பூமி எவ்வளவு வெப்பத்தை மேல் அனுப்ப முடியுமோ அதை அனுப்பும். முடியாத பட்சத்தில் அந்த வெப்பமானது மண்ணில் தங்கிவிடும். அதனால் அதிக உஷ்ணத்தை நாம் அனுபவிக்கிறோம்.

கடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன?:
இந்தப் பிரச்சினை நமக்கு மட்டும் இல்லை. தென் துருவ நாடுகளை எல்லாம் பாதித்துள்ளது.
ஒட்டுமொத்தமாகக் கீழ் அடுக்கு மண்டலத்தையும் மேல் அடுக்கு மண்டலத்தையும் நாம் மாற்றி விட்டோம்.
இவை மாறுகின்றபோது அவற்றின் சீற்றமானது கடல் மீது எதிரொலிக்கிறது. கடல் அதிகமான வெப்பத்தை உறிஞ்சுவதால், இந்தத் தக்கம் அதிகமாகக் காணப்படுகிறது.
3இல் 1 பக்குதான் நிலப்பகுதி. 3 இல் இரண்டு பங்கு கடல்பகுதி. இந்த நீர் வெப்பத்தை அதிகம் உள்வாங்கும். அந்த வெப்பத்துடன் கார்பன் டை ஆக்சைடு சேர்வதால் கடலின் அமிலத்தன்மை உண்டாகும். அப்படி அமிலத்தன்மை அதிகரிக்கும் போது வரும் 10 ஆண்டுகளில் மீன் இனங்கள் அழிந்து போகும்.
இந்தக் கடல் காற்று இல்லாததால் பருவக்காற்று மாறிவிட்டது. பருவக்காற்று மாறினால் மழை வராது. மேகக் கூட்டங்களும் தன்மையை மாற்றிக் கொண்டு விட்டது. கடந்த 100 ஆண்டுகளாகக் கோடை மழை பெய்து வந்தது. இந்த ஆண்டு சுத்தமாகக் கோடை மழை பெய்யவில்லை" என்கிறார்
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications