முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும்? என்னென்ன வசதிகள் இருக்கு? வெளியான அப்டேட்
சென்னை: ரூ.42 கோடி செலவில் ஒரே நேரத்தில் 120 பேருந்துகள் நின்று செல்லும் வகையில், முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இம்மாத இறுதியில் முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மேலும் அதில் என்னென்ன வசதிகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆம்னி பஸ்களும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டில் கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்துநிலையம் திறக்கப்பட்டது.

இதையடுத்து சென்னையில் இருந்து பிறமாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் கோயம்பேடுக்கு பதிலாக கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டன. ஜிஎஸ்டி ரோட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு இங்கு அமைக்கப்பட்டது. ஆனால் ஆம்னி பேருந்துகளுக்கு என்று தனியாக அமைக்கப்படவில்லை. இதற்காக முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வந்தது.
ரூ.42 கோடியில் முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்கும் பணியானது நடந்து வந்தது. தற்போது பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. தீபாவளிக்கு முன்பு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் எப்போது மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்பது குறித்து அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறினார்.
அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:- இந்த மாத இறுதிக்குள் முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் திறக்கப்படும். நிச்சயமாக இந்த மாத இறுதியில் முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் மக்களுடைய பயன்பாட்டுக்கு திறக்கப்படும். முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பார். 42 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில் 120 பேருந்துகள் ஒரே நேரத்தில் நின்று செல்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று ஓட்டுனர்கள், நடத்துனர்கள் தங்குவதற்காக இரண்டு கார்பெண்டரிகள், இரண்டு உணவகங்கள், கழிப்பிட வசதிகளோடு, நல்ல முறையில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசிதியோடு இந்த ஆம்னி பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்து ஓட்டுனர்களுக்கும், ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கும் பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்.
முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் திறக்கப்பட்டதும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் குறையும். அதி நவீன முறையில், தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ற வகையில் முடிச்சூர் பேருந்து நிலையமானது அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் நிச்சயமாக மக்கள் பயன்பாட்டுக்கு வரும். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications